
கடவுளின் மனமாற்றம் ஆண்டவரே இரக்கமாயிரும் என்று அன்றாட திருப்பலியில் நாம் ஜெபிக்கிறோம், இந்த தவக்காலம் என்பது அருளின் காலமாக, இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக, மனமாற்றத்தின் காலமாக, இருக்கின்றது. இந்த தவக்காலத்தில் நாம் உன்னதங்களிலே பாடுவதில்லை தங்க உடை அணிவதில்லை ஆடம்பரங்கள் இருப்பதில்லை ஆடம்பர கொண்டாட்டங்கள் இருக்காது ஆனால் முழு மன மகிழ்ச்சி கிடைக்கும் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் எடுத்துக் கூறுகிறது. அதாவது இன்றைய முதல் வாசகத்தில் (யோவேல் 2:12-18) அழுது புலம்பி ஆண்டவரிடம் திரும்பி வர அழைப்பு விடுக்கின்றது. இன்றைய (மத் 6:1-6, 16 - 18) நற்செய்தியில் நோன்பு இருக்கும்போது முக வாட்டத்தோடு இருக்க வேண்டாம் என்று இயேசு தனது சீடர்களுக்கு கூறுகின்றார். ஆக நாம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை நம்முடைய செயல்கள் முடிவு செய்கின்றது. ஆண்டவரிடம் நாம் மனம் திரும்பி வந்து அவரிடம் சரணடைகின்ற பொழுது அவருடைய அளவற்ற இரக்கத்தையும் அளவற்ற மன்னிப்பையும் நாம் பெறுகின்ற பொழுது அந்த இரக்கத்தை குறித்து நாம் அழுது புலம்ப வேண்டாம், அதைக் குறித்து நாம் மகிழ்ச்சி ...