23 September 2021. Introduction to blogger. Welcome all. This is my first blog. I start today
திருவருகை காலம் மூன்றாம் ஞாயிறு --- எண்ணம் போல் வாழ்வு உங்களுக்கு அழுமூஞ்சி குழந்தையைப் பிடிக்குமா ?அழகாக சிரிக்கிற குழந்தையைப் பிடிக்குமா ? கொஞ்சம் யோசிப்போம்!! சாமி கும்பிட கோவிலுக்குப் போனால் அங்கு சாமி சிரித்த முகத்தோடு அம்சமா இருந்தா பிடிக்குமா ?இல்லை கர்ணகடூரமா இருந்தா பிடிக்குமா ? ஏதாவது பொருள்கள் வாங்க போனாலும் அந்தக் கடைக்காரர் சிரித்த முகத்தோடு வரவேற்றால் பிடிக்குமா ? அல்லது சிடு சிடுசிடு என்றால் பிடிக்குமா ? எப்போதும் அழுதுகொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பவர்களை முதல் இரண்டு முறைக்கு அப்புறம் அவர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்வோம் இல்லையா? எண்ணம் போல் வாழ்வு. யார் யார் எண்ணம் எப்படியோ, அப்படியே எல்லாம். ஆதலால், புலம்பல்களையும், சோகங்களையும் விட்டுத்தள்ளுங்கள். எதுவும் இங்கு மாறி கொண்டேதான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. --------- திருவருகை காலம் மூன்றாம் ஞாயிறு நமக்குத் தரும் செய்தி மகிழ்ச்சி. ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் பிலிப்பியர் 4:4. திருவருகை காலத்தின் மையமாக இருக்கும் இந்த நாளில், இயேசு அவர் பிறப்பு மனித குலத்திற்கு, மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒன்றாக
Comments
Post a Comment