கடவுளின் மனமாற்றம் ஆண்டவரே இரக்கமாயிரும் என்று அன்றாட திருப்பலியில் நாம் ஜெபிக்கிறோம், இந்த தவக்காலம் என்பது அருளின் காலமாக, இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக, மனமாற்றத்தின் காலமாக, இருக்கின்றது. இந்த தவக்காலத்தில் நாம் உன்னதங்களிலே பாடுவதில்லை தங்க உடை அணிவதில்லை ஆடம்பரங்கள் இருப்பதில்லை ஆடம்பர கொண்டாட்டங்கள் இருக்காது ஆனால் முழு மன மகிழ்ச்சி கிடைக்கும் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் எடுத்துக் கூறுகிறது. அதாவது இன்றைய முதல் வாசகத்தில் (யோவேல் 2:12-18) அழுது புலம்பி ஆண்டவரிடம் திரும்பி வர அழைப்பு விடுக்கின்றது. இன்றைய (மத் 6:1-6, 16 - 18) நற்செய்தியில் நோன்பு இருக்கும்போது முக வாட்டத்தோடு இருக்க வேண்டாம் என்று இயேசு தனது சீடர்களுக்கு கூறுகின்றார். ஆக நாம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை நம்முடைய செயல்கள் முடிவு செய்கின்றது. ஆண்டவரிடம் நாம் மனம் திரும்பி வந்து அவரிடம் சரணடைகின்ற பொழுது அவருடைய அளவற்ற இரக்கத்தையும் அளவற்ற மன்னிப்பையும் நாம் பெறுகின்ற பொழுது அந்த இரக்கத்தை குறித்து நாம் அழுது புலம்ப வேண்டாம், அதைக் குறித்து நாம் மகிழ்ச்சி ...
† இன்றைய புனிதர் † (நவம்பர் 17) ✠ ஹங்கேரியின் புனிதர் எலிசபெத் ✠ (St. Elizabeth of Hungary) கைம்பெண்/ மறைபணியாளர்: (Widow and religious) பிறப்பு: ஜூலை 7, 1207 போஸ்ஸோனி, ஹங்கேரி அரசு (Pozsony, Kingdom of Hungary) இறப்பு: நவம்பர் 17, 1231 (வயது 24) மார்பர்க், புனித ரோம பேரரசு, (தற்போதைய ஜெர்மனி) (Marburg, Holy Roman Empire (Modern-day, Germany) சார்ந்துள்ள சமயம்/ சபை: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) ஆங்கிலிக்கன் திருச்சபை (Anglican Church) லூதரன் திருச்சபை (Lutheran Church) புனிதர் பட்டம்: மே 27, 1235 திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி (Pope Gregory IX) நினைவுத் திருவிழா: நவம்பர் 17 பாதுகாவல்: மருத்துவமனைகள், செவிலியர், விதவையர், நாடு கடத்தும் தண்டனை, மணப்பெண், ரொட்டி தயாரிப்பாளர், வீடற்ற மக்கள், இறக்கும் குழந்தைகள், கைம்பெண்கள், சரிகை-தயாரிப்பாளர்கள், தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபை (Third Order of Saint Francis) ஹங்கேரியின் புனிதர் எலிசபெத், "துரிங்கியாவின் புனிதர் எலிசபெத்" (Saint Elizabeth of Thuringia) என்றும் அறியப்படுபவர் ஆவார். “ஹங்கேரி அரசு” (Ki...
† இன்றைய புனிதர் † (நவம்பர் 9) ✠ பௌர்கஸ் நகர புனிதர் ஊர்சினஸ் ✠ (St. Ursinus of Bourges) பௌர்கஸ் முதல் ஆயர்: (First Bishop of Bourges) பிறப்பு: ---- இறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டு ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) நினைவுத் திருநாள்: நவம்பர் 9 கத்தோலிக்க திருச்சபையினால் புனிதராக வணக்கம் செலுத்தப்படும் புனிதர் ஊர்சினஸ், ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள இன்றைய “பௌர்கஸ்” உயர்மறைமாவட்டத்தின் (Archdiocese of Bourges) அந்நாள் முதல் ஆயராக கருதப்படுகின்றார். “தூர் நகர” (Bishop of Tours) ஆயரான “புனிதர் கிரகோரியின்” (Saint Gregory of Tours) பண்டைய புகழ்பெற்ற கணக்குகள், அவரை அப்போஸ்தலரான தூய “பிலிப்புவின்” (Philip the Apostle) நண்பரும், கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவருமான “நதானியேல்” உடன் (Nathaniel) தொடர்புபடுத்துகிறது. இவர் கிறிஸ்துவின் இறுதி இரவுணவில் (Last Supper) பங்குபெற்றதாகவும், அங்கே ஒரு பாடத்தை வாசித்ததாகவும் கூறுகிறது. புனிதர் “ஸ்தேவானின்” (Saint Stephen) மறைசாட்சியத்தின்போது, இவர் உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது. “தூய பேதுரு” (Saint Peter) இவரை கற்கால “மேற்கு...
Comments
Post a Comment