பாஸ்கா காலம் 6-ஆம் வாரம் மே 8 புதன் முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 17:15, 22-18:1 நற்செய்தி வாசகம்: யோவான் 16:12-15 இன்றைய நற்செய்தி முழு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியாரை பற்றியது. மூவொரு கடவுளின் மூன்றாம் ஆளான தூய ஆவியார் இறைவாக்கினர் வழியாக பேசிய தூய ஆவியார் கடவுளின் ஆற்றலும் உயிரளிப்பவருமான தூய ஆவியார் இயேசுவின் துணையாளராவார். தூய ஆவியாரின் துணை இன்றி இறைவனின் வெளிப்பாடுகளை புரிவதும், வாழ்வதும் எளிதாகாது. சோதனை காலங்களில் விசுவாச தளர்ச்சி ஏற்படும் போது இருளான நாட்களை ஒளியான நாட்களாக மாற்றுபவர் தூய ஆவியார். வாழ்வில் தொடர் தோல்விகளும், துன்பங்களும் வரும் போது துணை நிற்பவர் அவர். பலவகையான உண்மைகளை தேடும் ஒவ்வொருவருக்கும், குறிப்பாக புதிய மருந்தை கண்டுபிடிக்க விரும்பும் விஞ்ஞானிக்கும், சிறந்த ஆற்றலின் மூலத்தைத் தேடுபவருக்கும், மனித மனத்தின் ஆழத்தை அறிய விரும்பும் உளவியலாளருக்கும் இசைஞானிக்கும் கலைஞருக்கும் கதாசிரியருக்கும் படைப்பாற்றலோடு கூடிய உண்மையை வெளிப்படுத்துபவர் தூய ஆவியாரே. வாழ்வின் இக்கட்டான தருணங்களில் எந்த பாதையை தேர்ந்து க...
ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1:1-11 இரண்டாம் வாசகம்: எபேசியர் 4: 1- 13 நற்செய்தி வாசகம்: மாற்கு 16: 15- 20 நற்செய்தியை வாழ்வோம் இறை இயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே தாய்த் திருச்சபையானது இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. இயேசுவின் விண்ணேற்றம் மனிதரால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர். தெரிந்து கொள்ள முடியாத ஒரு நிகழ்வு. இப்பெறுவிழா நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் ஒன்று. விண்ணகமே நம் தாய் நாடு(பிலிப் 3:20) இரண்டாவது கருத்து நீங்கள் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். மூன்றாவது நீங்கள் என் சாட்சிகள். மூன்று பேர் குருவிடம் வந்தார்கள். சாமி என் தந்தை இறந்துவிட்டார் அவர் ஞாபகச் சின்னமாக என்றும் நினைவில் இருக்கின்ற வகையிலே நான் ஏதாவது செய்ய ஆசைப்படுகின்றேன் என்று சொன்னார்கள். அவர் ஒவ்வொருவராக கேட்டார். மூத்த மகன் சொன்னான் அழகிய மணிமண்டபம் கட்டி பளிங்குக் கல்லாலே செதுக்கி நான் அழகுபடுத்...
பாஸ்கா காலம் 6-ஆம் வாரம் மே 9 வியாழன் முதல் வாசகம்: திருத்துதர் பணிகள் 18: 1-8 நற்செய்தி வாசகம்: யோவான் 16: 16- 20 மகிழ்ச்சியாக வாழ என்ன செய்யலாம்? இயேசுவின் சில போதனைகள் அவரின் சீடர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. தன் பிரிவை பற்றி இயேசு கூறியதை அவர்கள் அறிந்து கொண்டனர். ஆனால் அவருடைய பிரிவின் பொருள் அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டு காணப்பட்டது. எனவேதான் அவர்களின் உள்ளத்தில் குழப்பம், சந்தேகம், கேள்விகள் போன்றவை எழுதுகின்றது. அவர்களின் கேள்விகளைப் புதியதொரு திசைக்கு இட்டுச் செல்கின்றார். ஒரு புதிய போதனையை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார். சீடர்களிடத்திலும் உலகத்திலும் அவரின் இறப்பு ஏற்படுத்தும் வித்தியாசமான விளைவைப் பற்றி கூறுகின்றார். சீடர்களிடத்தில் அவரின் இறப்பு துக்கத்தை ஏற்படுத்தினாலும் அது காலப்போக்கில் மகிழ்ச்சியாக மாறும் என்று உறுதிமொழி கொடுக்கின்றார். துயரமும் மகிழ்ச்சியும் மனித வாழ்க்கை வட்டத்தில் மாறி மாறி நிகழக்கூடிய எதார்த்தங்கள். சில சமயங்களில் நமது செபத்தின் வழியாக இயேசுவின் நெருக்கமான உடனிருப்பை நாம் உணர்கிறோம். சில நேரங்களில் தவிப்பு...
Comments
Post a Comment