20/08/2023. பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு.


முதல் வாசகம்: எசாயா 56: 1, 6-7

பதிலுரைப் பாடல்: திபா 67: 1-2. 4. 5,7

இரண்டாம் வாசகம்: உரோமையர் 11: 13-15, 29-32

நற்செய்தி வாசகம்: மத்தேயு15: 21-28


தடம் மாற வேண்டும்


தேன் என்பது மிகவும் இனிமையானது, அதை சுவைக்காத நபர் நம்மில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தத் தேன் எங்கிருந்து வந்தது என்பதை அந்தத் தேனைச் சுவைக்கும் நாம் அறிவதில்லை. அந்தத் தேன் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து இருக்கலாம், ஆனால் நாம் அதன் சுவையை மட்டுமே சுவைக்கின்றோம். அந்தத் தேன் எந்த பூவில் இருந்து வந்தது, எத்தனை நாட்களுக்கு முன் வந்தது என்று எதுவுமே நாம் அறிவதில்லை.


பல்லாயிரம் மலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட துளித்துளி தேன் தான், ஒரு பெரிய தேன் கூட்டில் சேகரிக்கப்பட்டு நாம் சுவைக்கும் தேனாக இருக்கிறது.


இன்றைய நற்செய்தி ( மத்தே 15: 21 -28) வாசகத்தில் வரும் கானானியப் பெண்ணின் நம்பிக்கையும் ஒரு மலரில் பூத்த தேன் போன்றது. பல்லாயிரம் கோடி மக்கள், மீட்புக்காக நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்த தருணம் அது.


மத்தேயு நற்செய்தியாளர் இயேசு கானானியப் பெண்ணை சந்திப்பதற்கு முன்பு வரை, இயேசுவின் மீது யாரும் நம்பிக்கை கொள்ளாத மக்களின் நிலை குறித்து வருத்தப்படுவதை பதிவு செய்கிறார். இந்தப் பகுதியை மிக நுணுக்கமாக கையாளுகின்றார் மத்தேயு நற்செய்தியாளர்.


அதாவது, இயேசு தீர், சீதோன் என்ற பகுதியை இலக்காகக் கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறார். இயேசுவின் பயணத்தில் ஒரு கானானிய பெண் குறுக்கிடுகிறார். இயேசு அவருக்கு பதில் கொடுக்கவில்லை, சீடர்கள் அந்தப் பெண்ணின் தொல்லை தாங்காமல் அனுப்பிவிடுமாறு இயேசுவை வேண்டுகிறார்கள். இருந்த போதும் இயேசு 'நான் காணாமல் போன இஸ்ரேல் மக்களுக்காகவே வந்தேன்' என்று பதில் கூறுகிறார். அந்தக் கானானிய பெண்ணிடம் ஒரு உவமையைக் கூறுகிறார். அந்தக் காணானிய பெண்ணின் பதிலை கண்டு வியப்படைந்து, அந்தக் கானானிய பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றார்.


இந்தப் பகுதியை எவ்வாறு ஆழமாக புரிந்து கொள்வது. இயேசுவின் இலக்கு தீர் சீதோன் பகுதிக்கு போவது. நற்செய்தியை பறைசாற்றும் பயணம் அது. அந்தப் பகுதிகளின் எல்லைகளில் வாழும் கானானியப் பெண் இயேசுவை அணுகுவது முதல் வியப்புப்பகுதியாக இருக்கிறது.


கண்டிப்பாக இயேசுவைப் பற்றி அறிந்து வைத்திருந்திருப்பார், இயேசுவால் தன் மகன் குணமடைவார் என்ற நம்பிக்கை கொண்டு இருந்திருப்பார். இந்த இரண்டும் தான் அவரை இயேசு பால் ஈர்த்தது.


இன்று நமது வாழ்வில் நாம் கடவுளை பற்றி அறிந்திருக்கின்றோமா? கடவுள் மீது எந்த அளவு நமது நம்பிக்கையை பதிய வைத்திருக்கின்றோம்?


மேலும் இன்றய நற்செய்தி வாசகம் முழுவதும், கானானிய பெண் இயேசுவை 'ஐயா' என்று தான் அழைக்கின்றார். ஒருவர் தர்மம் கேட்கின்ற பொழுது 'ஐயா, தர்மம் கொடுங்கள் ' என்று சொல்லி கேட்பார்கள். இதன் பொருள் நீங்கள் மேலானவர்களாகவே இருந்து கொள்ளுங்கள். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் என்பதாகும்.


பிள்ளைகளுக்கு உரிய உணவை நாய்களுக்கு கொடுப்பது முறையா? என்ற இயேசுவின் கேள்விக்கு. மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்கள் திண்ணுமே என்ற கானானிய பெண்ணின் பதில் மொழி இயேசுவின் சிந்தனை ஓட்டத்தை முழுமையாக மாற்றிக்விடுகிறது.


 இதை புரிந்து கொள்ள, ஒரு இனிய வார்த்தையை நாம் அறிந்து கொள்வோம். இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை "வைப்பு" (vibe) அதாவது இதன் பொருள், நாம் ஏதோ ஒன்றிற்கு உணர்வுபூர்வமாக கொடுக்கும் பதிலாக உள்ளது, அல்லது இதை பரவச நிலை என்று கூட சொல்லலாம். உடலில் ஏற்படும் புத்துணர்ச்சியால், நாம் அறியாத மகிழ்ச்சிக்குள் அல்லது உணர்ச்சிக்குள் மூழ்கி போவதாகும்.


பெந்தகோஸ்தே நிகழ்வுக்குப் பிறகு சீடர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வந்து நற்செய்தியை அறிவிக்கச் செய்தது தூய ஆவியால் அவர்கள் பெற்ற 'வைப்பு' ஆகும்.


இதுபோன்று கானானிய பெண்ணின் பதில் மொழியை கேட்ட இயேசு வைப்பு ஆகி, அந்தப் பெண்ணை 'அம்மா' என்று அழைப்பதாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இறை வார்த்தையை கேட்டு அதன் படி நடப்பவர்களே என் தாயும் சகோதரனும் சகோதரியும் ஆவார். என்று கூறிய வார்த்தைகளை, இங்கு இயேசு நினைவு கூறுகின்றார்.


அந்த கானானிய பெண் அப்படி என்ன செய்துவிட்டார்? என்ற கேள்வி நம்மில் எழலாம். பத்து கட்டளைகளில் முதல் கட்டளையான நாமே உன் கடவுள் நம்மை தவிர வேறு தெய்வங்கள் உமக்கு இருத்தல் ஆகாது. என்ற கட்டளையை முழுவதும் கடைபிடித்து இருக்கின்றார்.


இறைவாக்கினர் ஏசாயா வழியாக கடவுள் உரைத்த வார்த்தைகளை இங்கு இயேசு புரிந்துகொள்ள அந்தப் பெண் உதவி செய்கிறார். அதாவது ஏசாயா 56 : 7 'என் இல்லம் மக்களினங்கள் அனைவருக்கும் உரியது'. இதன் பொருள் யாவரும் இறைவனின் பிள்ளைகளே, அனைவருக்கும் கடவுள் ஒருவரே, என்ற சமத்துவத்தை இயேசுவுக்கே கற்றுத் தருகிறார்.


இதை நாம் முழுமையாக புரிந்து கொண்டு வாழ்ந்தால் நம்மால் நமது வாழ்க்கை பயணத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல முடியும். தவறான பாதைகளில் இருந்து விலகி தடம் மாறி சரியான பாதைகளுக்குச் செல்ல முடியும்.


எமதர்மன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!


அவள் மானுடப் பெண் என்றாலும்,

அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.


அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பன் ஆனார் எமதர்மன். 


அவர் மணந்த பெண் நல்லவள்தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.  


மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். 


ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால், மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.


மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.


மகனே.. நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  


மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியும்.


   எப்படித் தெரியுமா...? 


ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். 


உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.


நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. 


நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும்.


எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால், தைரியமாக மருந்து கொடு.


அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.  


அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.


மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,

 மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.


மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். 

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்.


ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்.  


யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது, எதிரில் அப்பாவை(எமனை) பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.


இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.


கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். 


யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.  

இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால்,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. 

 

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

எமன் (அப்பா) நின்று கொண்டிருந்தார்.


வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.


ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.


இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறாறே.  

எப்படி அவரை விரட்டுவது..?


பளிச்சென்று யோசனை பிறந்தது. 

வாசல் பக்கம் பார்த்து கத்தினான். 

அம்மா...


அப்பா உள்ளே இருக்கிறார். 


ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினாயே இதோ இங்கு தான் இருக்கிறார்.


   என்று அலறினான்.


அவ்வளவுதான் துண்டைக் காணோம்,

துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியே விட்டார்.


கட்டுனது எமனாயிருந்தாலும்,

அல்லது எவனாயிருந்தாலும்,

பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆக வேண்டும்.


எதுவுமே சரியில்லாத போதும்

எல்லாம் சரியாகி விடும் என்று நம்புவது

தான் வாழ்க்கை.


இறுதியாக


தமிழ் இலக்கியங்களில் சிறப்பாக திருக்குறளில் கூறுவதுபோல்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். ( திருக்குறள் - 619) 


விளக்கம்


தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்.


நாம் இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கை ஒவ்வொரு நாளும் மலரிலிருந்து எடுக்கப்படும் தேன் ஆக இருக்கட்டும்.



Comments

Popular posts from this blog