05/08/2023
மரியன்னை பேராலய நேர்ந்தளிப்பு
( பணிமய மாதா)
இயேசுவின் அன்னையை கடவுளின் தாய் என்று கி பி 431 ஆம் ஆண்டில் எபேசு சங்கம் அறிவித்தபின், திருத்தந்தை மூன்றாம் கிறிஸ்துஸ் உரோமையில் எஸ்குலைன் குன்றுகள் மீது ஒரு பேராலையம் எழுப்பி, இறைவனின் தூய அன்னைக்கு அதை நேர்ந்து அளித்தார். தூய கன்னி மரியாவின் மாட்சிக்கு இன்று நேர்ந்து அளிக்கப்பட்ட மிகத் தொன்மை வாய்ந்த கோயில் இதுதான்.
இன்று உலகம் முழுவதும் அன்னை மரியாவுக்கு ஏராளமான கோயில்கள் உண்டு. ஆனால் அன்னை மரியா வாழ்ந்த காலத்தில், அவர் இறைமகனை பெற்றெடுப்பதற்கு என்று ஒரு சத்திரம் கூட கிடைக்கவில்லை.
இதை எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்றால், ஒருவர் நம்முடன் இருக்கும் போது அவரின் அருமை தெரியாது, மாறாக அவர்கள் நம்மிடையே இல்லாத போது அவர்களுக்கு வேண்டியதை செய்வதற்கு ஒப்பாகும்.
அன்னை மரியாவிடம் நாம் பலவற்றைக் குறித்து வேண்டுதல்கள் எழுப்பினாலும், அடிப்படையில் தேவைப்படுவது ஒன்று மட்டும்தான்.
"தூய மரியாவே இறைவனின் அன்னையே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும்" என்பதே அது.
நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது மட்டுமல்லாமல் இறைவனின் மீட்பை நிறைவாக அனுபவிக்க அன்னை மரியாவின் துணையை வேண்டுகிறோம்.
ஆனால் பல வேலைகளில் இறைவனின் அன்னையை நமது அன்னை, நமது தாய் என்றும் பொருள் உணர்ந்து அழைத்து இருக்கின்றோமா?
இந்த விழா நமக்கு கற்றுத் தரும் பாடம்.
1. அன்னை மரியா இயேசுவின் தாய்.
அன்னை மரியாளை இயேசுவின் தாய் என்பதை நான்கு நற்செய்தியாளர்களும் தங்களது நற்செய்தி நூலில் பதிவிட்டுள்ளார்கள். ( மத்தேயு 2 :11 மாற் 3:1 லூக்கா 2:34, யோவான்2:5)
இறைவன் மனிதர்களின்(நம் )நடுவில் வர விரும்புகிறார் என்பதற்காகவே மரியின் வயிற்றில் பிறந்தார்.
2. கடவுளின் தாய்
லூக்கா நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின் தாய் அன்னை மரியாவை கண்டபோது கூறிய வார்த்தைகள் " என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் ". நம் நடுவில் உள்ள சில நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு கடவுள் தெரிகிறார் என்பதே ஆகும்.
3. திருஅவையின் தாய்
இயேசு திருஅவையின் தலைவராக இருந்தாலும், திருஅவையின் அவல நேரங்களில் அன்னை மரியாவின் உதவியை நாடி நிற்கின்றது போல, நாமும் நமது அவல நேரங்களில் அன்னையின் ஆதரவும் உடன் இருப்பும் நம்மோடு இருக்கும் என்பதாகும்.
4. அனைவருக்கும் தாய்
அன்னை மரியா படைப்பு அனைத்திற்கும் தாய், ஏனெனில் படைத்தவரையே கருவில் சுமந்த அவர், படைத்தவரின் பராமரிப்பில் உள்ள நம்மை என்றுமே கை விடமாட்டார்.
அன்னையின் வழியில் நடப்போம் அன்னையின் அரவணைப்பில் நிலைப்போம்.
Keep it up ... Do it well..
ReplyDelete