06/08/2023 ஆண்டவரின் தோற்ற மாற்றம்.
மாற்றம் வேண்டாமா
கிபி 11ம் நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்ட இந்த வழிபாடானது, கிபி 1457 ல் உரோமைப்பட்டியலில் இணைக்கப்பட்டது.
இயேசுவின் தோற்ற மாற்றம் ஐந்து நிலைகளில் நடைபெறுகிறது. மத்தேயு 17 1-9 வரை உள்ள வார்த்தைகளை அடிப்படையில், முதலாவதாக இயேசு தன் சீடர்களை ஒரு உயர்ந்த மலைக்கு அழைத்துச் செல்கின்றார். இரண்டாவதாக அவர்கள் முன் அவர் உருமாற்றம் அடைகின்றார். மூன்றாவதாக அங்கு மோசேயும் எலியா வுட் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நான்காவதாக சீடர்கள் அங்கேயே இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள். ஐந்தாவதாக இயேசு தனது விருப்பத்lதை கூறுகிறார்.
இயேசு தனது சீடர்களை உயர்ந்த மலைக்கு அழைத்துச் செல்வதன் நோக்கம். அவர்களுக்கு தந்தை அனுபவத்தை பெற்று தருவது ஆகும்.
இயேசு அவர்கள் முன் உருமாறியதன் காரணம், அவர்களும் தங்களது உண்மையான நிலையை அறிந்து உணர வேண்டும் என்பதாகும்
மோசையுடனும் எலியாவுடனும் இயேசு பேசிக் கொண்டிருந்தது போல், சீடர்களும் தந்தையோடும் இயேசுவோடும் பேச வேண்டும் என்பதாகும்.
சீடர்கள் அங்கேயே இருப்பது நல்லது என்று சொல்வதன் நோக்கம், இறைவனின் அன்பை சுவைத்தவர்கள் அதிலிருந்து வெளிவர விரும்புவதில்லை.
இயேசு தனது விருப்பத்தை தெரிவிப்பது, சீடர்கள் பெற்றுக்கொண்ட அன்பை பிறரின் உள்ளங்களிலும் விதைக்க வேண்டும் என்பதாகும்
இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வை இப்படியும் கூட நாம் புரிந்து கொள்ளலாம்.
மலை மீது ஏறுவது என்பது நாம் அடைய வேண்டிய இலக்காகவும் உள்ளது. பிலிப்பியர் 3:20 விண்ணகமே நம் தாய் நாடு. ஆக நாம் இந்த மண்ணில் நிலையாக இருக்கப் போவதில்லை என்றும் விண்ணகமே நமது தாய்நாடு என்பதை இந்தப் பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.
இயேசுவின் உருமாற்றம்
இயேசுவின் ஆட்சிக்குரிய உடலின் சாயலால், தாழ்த்தப்பட்ட நமது உடலை மாற்றம் அடைய செய்துள்ளார்.
நாம் நமது உடலை நான்கு நிலைகளில் உருமாற்றம் செய்ய வேண்டும்.
பொருளாதாரத்தில் ஏழைகள் பணக்காரர்கள் என்ற நிலையை உருமாற்றம் செய்து அனைவருமே சமம் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
அரசியலில் ஆழ்வோர் மற்றும் அடிமைகள் என்ற நிலையை மாற்றி அனைவருமே இறைவனின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
சமுதாயத்தில் உயர்த்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் என்ற நிலையை உருமாற்றி, நாம் அனைவருமே இறைவனின் சாயல் என்பதை உணரச் செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழலில் பணம் பார்க்க இயற்கையை மாசுபடுத்துபவர்கள், எளிய விவசாய தொழில் செய்வோர்கள் இடையே உள்ள வேற்றுமையை நாம் உருமாற்றி இயற்கை நமது அன்னை என்பதை உணரச் செய்ய வேண்டும்.
இவ்வாறு நாம் வாழும் இந்த உலகில் உள்ள வேற்றுமைகள் அனைத்தையும் களைந்து இறைவனில் நாம் உருமாற்றம் அடையும் பொழுது, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு எடுத்துரைக்கும் சான்று போல், நம்மாலும் சான்று பகிர முடியும்.
வரலாற்றை நாம் கற்றுக் கொள்ளும் பொழுது அவற்றில் உள்ள பிழைகளையும் கண்டறிந்து அந்தப் பிழைகள் மீண்டும் நடக்காமல் பாதுகாப்பதே மனிதத்தை காக்கும் என்பதே இன்று நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக உள்ளது.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள்.
நம்மால் எப்பொழுது ஏழைகள் உயர்கிறார்களோ, நம்மால் எப்பொழுது அனைவரையும் சமமாக பார்க்க முடிகிறதோ, நம்மால் எப்பொழுது அனைவரையும் ஒரே மாதிரி நடத்த முடிகிறதோ, நம்மால் எப்பொழுது இயற்கையை பேணிக்காக்க முடிகிறதோ, அப்பொழுது எல்லாம் இறைவனின் உருமாற்றம் நம்மிடம் நடைபெறும். நம்முடைய ஆடைகளும் வெண்பனி போல மாறும்.
இறுதியாக
நிரந்தரமே இல்லாத உலகத்தில் மனிதர்களை தரம் தரமாக பிரித்து வாழ்கிறார்கள் மனிதர்கள்!
"தகுதி" பார்த்து மட்டும் யாரிடமும் பழகாதே. "இறந்த" பிறகு எல்லாத்தகுதி உடையவனுக்கும்
"பிணம்" என்றுதான் பெயர்.
ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம்,எப்பொழுது வேண்டுமானாலும் சாய்ந்து விடலாம் என்பதை நினைவில் கொள்வோம்.
👍
ReplyDelete