டிசம்பர் 10, 2023. திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு


எசாயா  40: 1-5, 9-11

திபா 85: 8ab-9. 10-11. 12-13 

2 பேதுரு 3: 8-14

மாற்கு  1: 1-8


திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு நமக்கு அமைதி என்னும் மைய கருத்தில் சிந்திக்க அழைக்கிறது. நீதியும், சமநிலையும்  தொடரச் செய்வதை அமைதியின் வேலையாக உள்ளது. மனித புரிதலின்படி செயலற்ற

அமைதி, செயல் அமைதி என வகை உண்டு. ஒருவர் இறந்த பிறகு உடல் அமைதியாக இருப்பது செயலற்ற அமைதி. ஒருவர் மற்றவரை மன்னித்து ஏற்றுக் கொள்வது செயல் அமைதி.


அமைதி என்ற வட்டம் ஐந்து நிலைகளில் நம்மைச் சுற்றி விரிவடைகிறது.


தனிநபர் அமைதி அதாவது நமது உள்ளம் அல்லது மன அமைதி.


மனித குழுக்கள் இடையே அமைதி அதாவது குடும்பங்களுக்கு இடையே உள்ள அமைதி.


மனித சமூகங்களுக்கு இடையேயான அமைதி அதாவது வீட்டிற்கு வெளியே மற்றவர்களோடு பகை இல்லா வாழ்வு வாழ்வதன் வழியாக பெரும் அமைதி.


மாநிலங்களுக்கு இடையே அமைதி.


நாடுகளுக்கு இடையே உள்ள அமைதி என, அமைதி 5 நிலைகளில் நம்மை சுற்றி விரிவடைந்து கொண்டிருக்கிறது.


இரண்டு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருந்தால்,அங்கு உள்ள வளங்கள் பகிரப்பட்டு, இரண்டு நாடுகளும் வளர்ச்சி அடைகிறது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே அமைதி ஏற்பட்டால் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது. இரண்டு குடும்பங்களுக்கு இடையே அமைதி ஏற்பட்டால் அங்கு பாதுகாப்பு பெருகுகிறது. இரு நபர்களுக்கு இடையே அமைதி ஏற்பட்டால் அன்பு அங்கு வளர்கிறது. ஒரு நபர் தனது உள்ள அமைதியை நிலைநாட்டும் பொழுது அவரது வாழ்நாள் பெருகுகிறது. 


இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த உலகின் அமைதியை குலைத்து விடுகிறது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை என்றால் அந்த மாநிலங்களில் உள்ளவர்களின் அமைதியை அது கெடுத்து விடுகிறது. இரண்டு குடும்பங்களுக்கு இடையே பிரச்சனை என்றால் அது அந்த வீட்டில் இருப்பவர்களின் அமைதியை அழித்து விடுகிறது. இரு நபர்களுக்கு இடையே உள்ள பிரச்சனை அங்கு இருக்கும் இருவரின் அமைதியையும் அழித்து விடுகிறது. ஒரு தனி நபருக்குள்ளே அமைதி இல்லை என்றால் அது அவரை தற்கொலை செய்ய வழி செய்கிறது.


நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு கற்றுத் தரும் செய்தி, உலகில் அவருக்கு உகந்தவர்களாக வாழ்பவருக்கு அமைதி வரும் என்று.

எவ்வாறு இயேசுவின் வருகைக்கு நம்மை தயாரிக்கலாம், என்பதை இன்றைய இரண்டாம் வாசகம்  நமக்கு கற்றுத் தருகிறது 1 பேதுரு 3:9 ஆண்டவர் பொறுமையோடு உள்ளார்,எல்லாரும் மாற வேண்டும் என்று. அதாவது ஆண்டவரின் பொறுமைக்கான காரணம் நம்மிடையே மனமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே. புயலுக்கு முன் அமைதி என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண்டவரின் வருகைக்கு முன் அமைதி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எ கா : சென்னையில் புயல் , மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு.


அமைதியில் ஆண்டவரின் குரல் கேட்கும். பாலைவனத்தில் அமைதி எல்லா திசையும் பரவி கிடக்கும், அங்கு ஆண்டவரின் குரல் மட்டுமே ஒலிக்கும். ஆண்டவரின் குரலை அமைதியில் கேட்டவர்கள் ஆண்டவரின் அமைதியின் தூதர்களாக மாறுகிறார்கள். புனித பிரான்சிஸ் அசிசியார், அமைதியின் தூதனாய் என்ற ஜெபத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளார். அமைதியின் தூதராய் ஆண்டவருக்காக வழியை செம்மை படுத்துபவராய் வாழ்வதற்கான நெறிமுறைகளை தனது ஜெபத்தில் நமக்கு கற்றுத் தந்தார். இந்தப் பணியை இன்று நற்செய்தி வாசகத்தின் திருமுழுக்கு யோவான் செய்தார்.


மனித புரிதலில் உள்ள அமைதி என்பது, பேசாமல் இருப்பது அல்லது அகிம்சை போராட்டம் அல்லது முதுமையில் அமைதி அல்லது இலஞ்சத்தால் அமைதி காத்தல் அல்லது தேர்வு அரையில் அமைதி காத்தல் அல்லது பயத்தால் வரும் அமைதி அல்லது அரசியல் அமைதி என்பதை நமக்கு கற்றுத்தரும்.


ஆண்டவரின் அமைதி என்பது உலகப் போராட்டங்கள் நடுவில் ஆண்டவரின் உதவியை நாடுவது.( திருப்பாடல் 23). நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பை வேண்டி இந்த மன்னிப்பினால் வரும் அமைதி ( ஏசாயா 40 )


இந்த அமைதியை நாம் பெற வேண்டுமென்றால் பிறரின் பாவங்களை நாம் மன்னிக்க வேண்டும், அப்பொழுது தான் இறைவன் நமது பாவங்களை மன்னித்து நமக்கு அமைதி தந்திடுவார். திருப்பலியில் ஒருவர் மற்றவருக்கு அமைதி சொல்லும் பொழுது மனதார மன்னித்து அவரை ஏற்றுக் கொண்டு அமைதி உங்களுக்கு உரித்தாகட்டும் என்று சொல்லுங்கள். நாம் இவ்வாறு செய்தால் ஆண்டவரின் அமைதியை கண்டடைய முடியும்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு