இன்றைய புனிதர் † ( ஃபிப்ரவரி 29 ) ✠ புனித வார்செஸ்டார் நகர ஒஸ்வால்டு ✠ ( St. Oswald of Worcester )
† இன்றைய புனிதர் †
( ஃபிப்ரவரி 29 )
✠ புனித வார்செஸ்டார் நகர ஒஸ்வால்டு ✠
( St. Oswald of Worcester )
'யோர்க்' மறை மாநில பேராயர் :
Archbishop of York
பிறப்பு : தெரியவில்லை
இறப்பு : 29 ஃபெப்ரவரி 992
29 February 992
நினைவுத் திருநாள் : ஃபிப்ரவரி 29
புனித ஒஸ்வால்டு, டானிஷ் (Danish) வழி மரபினர் ஆவார். ஆனால், இவர் தமது மாமனும், காண்டர்பரி (Canterbury) மாகாணத்தின் பேராயருமான 'ஓடா' (Oda) என்பவரால் வளர்க்கப்பட்டார். பின்னாளில் இவரை இவரது மாமன் ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள ஃப்ளூரி (Fleury) என்னும் குரு மடத்திற்கு துறவியாவதற்காக அனுப்பினார்.
959ல் இவர் குருவாக திருப்பொழிவு செய்யப்பட்டார். சில வருடங்களின் பிறகு, மாமனின் வேண்டுகோள்படி, இவர் இங்கிலாந்து திரும்பினார். ஆனால், இவர் வருவதற்கு முன்பே இவரது மாமன் பேராயர் 'ஓடா' இறந்து போனார். மாமனின் இறப்பால் ஆதரவற்றுப் போன ஒஸ்வால்டு, 'யோர்க் மறை மாநிலத்தின் அப்போதைய பேராயர் 'ஒஸ்கிடேல்' (Oskytel) என்பவரின் ஆதரவை பெற்றார்.
அவரது நடவடிக்கைகளால் கவரப்பட்ட மற்றொரு பேராயர் டன்ஸ்டன் (Dunstan), இவரை ஒர்செஸ்டர் (Worcester) மாகாணத்தின் ஆயராக 961ல் திருப்பொழிவு செய்தார். திருச்சபையை வளர்ப்பதில் ஒரு ஆயராகவும் பேராயராகவும் இவர் பெரும் பங்கு வகித்தார். இவர் அநேக குரு மடங்களை கட்டினார்.
இவர், தவக்காலங்களில், தினமும் ஏழைகளின் பாதங்களைக் கழுவும் பணியை வழக்கமாகக் கொண்டிருந்தார். 29 ஃபெப்ரவரி 992ல் இதுபோன்ற ஒரு நிகழ்வின் போது இவர் மரணமடைந்தார்.
ஒர்செஸ்டர் (Worcester) மாகாணத்தின் புனித மரியின் தேவாலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். இவரது இறுதிச் சடங்கின் போதும், இவரது கல்லறையிலும் அதிசயங்கள் பல நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
இவரது மரணத்தின் பிறகு சிறிது காலத்திலேயே 'ராம்சே அபே' (Ramsey Abbey) எனும் குருமடத்தின் துறவி 'பிர்த்ஃபெர்த்' (Byrhtferth) என்பவரால் இவரது சரிதம் எழுதப்பட்டது.
விரைவிலேயே இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.
Comments
Post a Comment