இன்றைய புனிதர் † (மார்ச் 23) ✠ புனிதர் டுரீபியஸ் ✠ (St. Turibius of Mogrovejo)
† இன்றைய புனிதர் †
(மார்ச் 23)
✠ புனிதர் டுரீபியஸ் ✠
(St. Turibius of Mogrovejo)
பேராயர், மறைப்பணியாளர்:
(Archbishop, Missionary)
பிறப்பு: நவம்பர் 16, 1538
மயோர்கா டி கம்போஸ், லியோன் அரசு, ஸ்பெய்ன்
(Mayorga de Campos, Kingdom of León, Spain)
இறப்பு: மார்ச் 23, 1606 (வயது 67)
ஸனா, வைசிராய் காலணியாதிக்க பெரு, பெரு
(Saña, Viceroyalty of Peru, Peru)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
குருபரிபாலன திருச்சபை (ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளிலுள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை)
(Episcopal Church (Anglican Church in the US and Scotland)
முக்திபேறு பட்டம்: ஜூலை 2, 1679
திருத்தந்தை பதினோராம் இன்னொசென்ட்
(Pope Innocent XI)
புனிதர் பட்டம்: 1726
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)
நினைவுத் திருநாள்: மார்ச் 23
பாதுகாவல்:
பெரு (Peru), லிமா (Lima), இலத்தின் அமெரிக்க ஆயர்கள் (Latin American bishops), பிறப்புரிமை (Native rights), சாரணர்கள் (Scouts), “வல்லடோலிட்” – வட ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு நகரம் (Valladolid, a city in northern Spain)
புனிதர் டுரீபியஸ், “ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் உயர்பதவி” (Spanish Roman Catholic prelate) வகித்தவரும், கி.பி. 1579ம் ஆண்டுமுதல், கி.பி. 1606ம் ஆண்டில் தமது மரணம்வரை (சுமார் இருபத்தேழு வருடங்கள்) “லிமா” உயர்மறைமாவட்டத்தின் (Archbishop of Lima) பேராயராக பணியாற்றியவருமாவார். முதலில் மனிதநேயமும், சட்டமும் கற்ற இவர், பின்னர் பேராசிரியராகவும், அரசன் இரண்டாம் பிலிப்புவின் (King Philip II) உத்தரவின் பேரில் நீதி விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றினார். இவரது பக்தியும், கற்கும் திறனும் அரசனின் காதுகளைச் சென்றடைந்தது. அக்காலத்தில் இது வழக்கமில்லை எனினும், அரசுமுறை அனுபவமோ, நீதி விசாரணைகளில் முன் அனுபவமோ இல்லாத டுரீபியஸுக்கு இப்பதவி கிட்டியது. நீதி விசாரணைகளில் இவர் செய்திருந்த குறிப்பிடத்தக்க பணிகள் இவருக்கு அரசனிடம் புகழைத் தேடித் தந்தது. இதன் காரணமாக, அவ்வமயம் காலியாக இருந்த லிமா உயர்மறைமாவட்ட பேராயர் பதவியில் இவரை நியமித்தார். தமது எதிர்ப்பையும் மீறி, திருத்தந்தை அதனை அங்கீகரித்தார்.
“டொரீபியோ அல்ஃபோன்சோ டி மொக்ரோவேஜோ” (Toribio Alfonso de Mogrovejo) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெயின் நாட்டின் உயர் குடியில் பிறந்தவர் ஆவார். சிறந்த கல்விமானான டுரீபியஸ், புகழ் பெற்ற 'சலமான்கா' நகரின் பல்கலை கழகத்தின் (University of Salamanca) சட்ட பேராசிரியரும் ஆவார்.
கி.பி. 1578ம் ஆண்டு, கத்தோலிக்க குருவாக அருட்பொழிவு பெற்ற இவர், பெரு நகருக்கு அனுப்பப்பட்டார். அரசன் இரண்டாம் பிலிப்புவால் (King Philip II) “லிமா” நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1579ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகொரி (Pope Gregory XIII) அதற்கு அங்கீகாரம் அளித்தார். 580ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், "செவில்" (Seville) உயர் மறைமாவட்ட பேராயர் "கிறிஸ்டோபல் ரோஜஸ் செண்டோவல்" (Cristóbal Rojas Sandoval, Archbishop of Seville) அவர்களால் பேராயராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.
970 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிமா நகருக்கு நடை பயணமாக சென்றபடி தமது அருட் பணியை தொடங்கினார். கவர்ந்திழுக்கும் நாவன்மை கொண்ட போதகரான டுரீபியஸ், எண்ணற்ற பூர்வீக குடியினருக்கு திருமுழுக்கு அளித்ததுடன், அவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனமும் வழங்கினார். "லிமா நகர புனிதர் ரோஸ்" (St. Rose of Lima) மற்றும் "புனிதர் மார்ட்டின்" (St. Martin de Porres.) உள்ளிட்டோர் இவரால் திருமுழுக்கு பெற்று உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றவர்களே.
இவர் சாலைகள், உறைவிட பள்ளிகள், பல பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் கிறிஸ்தவ தொழுகைக் கூடங்களைக் கட்டினார். கி.பி. 1591ம் ஆண்டு, மேற்கு துருவத்தில் (Western Hemisphere) முதல் குருத்துவ பள்ளியை (First Seminary) நிறுவினார். 1604ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், இரண்டாம் நாளன்று, “மூன்றாம் லிமா பேராலயத்தின்” (Third Lima Cathedral) முதல் பகுதியை திறந்து வைத்தார்.
டுரீபியஸ், தமது பணி காலத்தில் பதின்மூன்று பேராய மாநாடுகளைக் (Diocesan Synods) கூட்டினார். மூன்றுமுறை மாகாண சபைகளுக்கான (Provincial Councils) கூட்டங்களைக் கூட்டினார். இவரது காலத்தில், லிமா (Lima) மகத்தான உயர் மறைமாவட்டமாக (Immense Archdiocese) மாறியது.
மக்களின் குடியுரிமைகளுக்காக, பெரு நாட்டு ஆட்சியாளர்களுக்கெதிராக போராடிய இவர், அம்மக்களால் தங்களது பரிந்து போராடும் தலைவராக பார்க்கப்பட்டார். அங்குள்ள பேச்சு வழக்கினைக் கற்றுக்கொண்ட இவர், எண்ணற்ற பூர்வீக குடிகளை கிறிஸ்தவர்களாக மாற்றினார்.
தாம் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னமே இவர் தமது இறப்பின் நாளையும் நேரத்தையும் கணித்தார். இருப்பினும், தமது இறை பணியை விடாது செய்து வந்தார். "பகஸ்மயோ" (Pacasmayo) என்ற இடத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், தமது பணியைத் தொடர்ந்தபடியே, மிகவும் மோசமான நிலையில் "ஸனா" (Sana) வந்தடைந்தார். தாம் கணித்தபடியே கி.பி. 1606ம் ஆண்டு, மார்ச் மாதம், 23ம் நாளன்று, மரணமடைந்தார்.
டுரீபியஸ், தமது பணி காலத்தில் எண்ணற்ற குருக்களுக்கும் ஆயர்களுக்கும் பேராயர்களுக்கும் அருட்பொழிவு செய்வித்தார்.
Comments
Post a Comment