பாஸ்கா காலம் 7-ஆம் வாரம் மே 16 வியாழன்

 பாஸ்கா காலம் 7-ஆம் வாரம்


மே 16 வியாழன்


முதல் வாசகம்:

திருத்தூதர் பணிகள் 22:30, 23:6-11


நற்செய்தி வாசகம் 17:20-26


வேற்றுமையின் வழியே அன்பில் ஒற்றுமை காண்போம்


திருஅவை ஓர் இயக்கம்: ஒரு நம்பிக்கை, வாழ்வியல். இதன் இயல்புப் பண்பையே இயேசு தனது இறைவேண்டலாக முன்வைக்கிறார். அதுதான் ஒன்றி வாழும் வாழ்வுப் பண்பு. இதுவே இயேசுவின் வாழ்வியல் இரகசியம். ஒன்றாய் வாழ்வது என்பது கட்டாயப்படுத்தப்பட்ட நெருக்கடி வாழ்வல்ல. சுதந்திரமான தன் முடிவில் விருப்பு வெறுப்பற்று, விட்டுக்கொடுத்து, எதையும் ஏற்று, எவரையும் தாங்கி, "எல்லாருக்கும் எல்லாமாய்" வாழ்வோம். நன்மையை மட்டுமே என்றும் விரும்பிச் செய்யும், புனித உள்ளமான வாழ்வே அது. எடுப்பதில் இல்லாமல் கொடுப்பதில் மட்டுமே அக்கறையோடு கவனம் செலுத்தும் வாழ்வே அது. இந்த உண்மையான வழிபாட்டை மக்கள் என்றும் கடைபிடிக்க," எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக" என இயேசு இறைவேண்டல் செய்வதன் மூலம் மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதில், அவருக்குள்ள ஆசையையும், ஆர்வத்தையும் காட்டுகிறது. சில தவறான புரிதல்கள் உறவை முறித்து விடுகிறது. சில பதவி வெறிகள் சமூக ஒற்றுமையைக் குலைத்து விடுகிறது. சில சுயநலங்கள் நட்பில் வளரும் ஒற்றுமையைக் காட்டி கொடுத்து விடுகிறது. இப்படியெல்லாம் மனிதன் ஒற்றுமையை இழப்பான் என்பதை இயேசு அறிந்துதான் அவனுக்காகச் செபிக்கிறார். மேலும் மனிதனை ஒன்றுபட்டு வாழவும் அழைக்கின்றார். ஆகவே நாமும் இயேசுவோடு செபித்து ஒன்றித்து வாழ்வோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog