† இன்றைய புனிதர் †

(ஜூன் 26)



✠ புனிதர் ஜோஸ்மரியா எஸ்கிரிவா ✠

(St. Josemaría Escrivá de Balaguer)


குரு, சாதாரண நிலைவாழ்வின் புனிதர்:

(Priest; Saint of Ordinary Life)


பிறப்பு: ஜனவரி 9, 1902

பார்பஸ்ட்ரோ, அரகன், ஸ்பெயின்

(Barbastro, Aragon, Spain)


இறப்பு: ஜூன் 26, 1975 (வயது 73)

ரோம், இத்தாலி

(Rome, Italy)


ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


அருளாளர் பட்டம்: மே 17, 1992

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


புனிதர் பட்டம்: அக்டோபர் 6, 2002

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


முக்கிய திருத்தலங்கள்: 

அமைதியின் அன்னை, ஓபஸ் தேயி-யின் தலைமை ஆலயம், ரோம்

(Our Lady of Peace, Prelatic Church of Opus Dei, in Rome)


நினைவுத் திருவிழா: ஜூன் 26


“புனிதர் ஜோஸ்மரிய எஸ்கிரிவா டி பலகுயர் ஒய் அல்பஸ்”, (Saint Josemaría Escrivá de Balaguer y Albás) “ஓபஸ் தேயி” (Opus Dei) (ஆங்கிலம்: கடவுளின் பணி) (English: Work of God) என்னும் பொது நிலையினருக்கான கத்தோலிக்க நிறுவனமொன்றினை நிறுவிய ஸ்பெயின் (Spain) நாட்டின் ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். “ஓபஸ் தேயி” (Opus Dei), நாம் அனைவருமே தூய வாழ்க்கை வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும், சாதாரண வாழ்க்கை புனிதத்துவத்திற்கு ஒரு பாதை என்றும் கற்பிக்கிறது. குறிப்பிட்ட உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, திருத்தந்தையால் நியமனம் செய்யப்படும் கத்தோலிக்க குருவின் ஆட்சியின் கீழுள்ள இந்நிறுவனத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பொதுநிலையினரும் மதச் சார்பற்ற குருக்களுமேயாவர்.


2002ம் ஆண்டில் இவருக்கு புனிதர் பட்டம் அளித்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், “புனிதர் ஜோஸ்மரிய எஸ்கிரிவா கிறிஸ்தவத்திற்கு சாட்சியம் பகர்ந்த தலையானவர்களுள் ஒருவர்" என்றார்.


இவர், ஸ்பெயின் நாட்டின் தலைநகரான “மேட்ரிட்’டிலுள்ள” “கம்ப்லுயுடென்ஸ் பல்கலைக்கழகத்தில்” (Complutense University of Madrid) சிவில் சட்டமும் (Civil Law), ரோம் (Rome) நகரிலுள்ள “லடெரன் பல்கலைக்கழகத்தில்” (Lateran University) இறையியலில் (Doctorate in Theology) முனைவர் பட்டங்களும் வென்றார். 


43 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட, (The Way) என்னும் பெயரில் இவர் எழுதி வெளியான இவரது புத்தகம், பல இலட்சம் பிரதிகள் விற்பனையாயின.


ஜோஸ்மரிய எஸ்கிரிவா மீதும் இவரது நிறுவனமான “ஓபஸ் தேயி” மீதும் சர்ச்சைகளும் – முதன்மையாக, இரகசியங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. உயர்தரம், வழிபாட்டு முறை, ஸ்பெயின் நாட்டில் ஜெனரல் பிராங்கோவின் சர்வாதிகாரம் (Dictatorship of General Franco) போன்ற வலதுசாரி காரணங்களுடன் அரசியல் ஈடுபாடுகளும் சரிச்சைகளில் சிக்கின.


மரணத்துக்குப் பிந்தைய இவரது புனிதர் பட்டத்துக்கான தயாரிப்புகள், சில கத்தோலிக்கர்களாலும் உலகளாவிய பத்திரிக்கையாளர்களாலும் கணிசமான கவனத்தையும் சர்ச்சைகளையும் ஈர்த்தது. “ஓபஸ் டேய்” (Opus Dei) (ஆங்கிலம்: கடவுளின் பணி) (English: Work of God) சம்பந்தமான சரித்திரம் பற்றின புலன் விசாரணைகளில், வாட்டிகனின் “ஜான் எல். ஆலன், ஜூனியர்” (John L. Allen, Jr) உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டனர். பல குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும், அவை ஜோஸ்மரிய எஸ்கிரிவா மற்றும் அவரது நிறுவனங்களின் எதிரிகளால் உருவாக்கப்பட்டவை என்றும் கூறப்பட்டன.


ஆரம்ப வாழ்க்கை:

“ஜோஸ் மரிய மரியானோ எஸ்க்ரிவா ஒய் அல்பாஸ்” (José María Mariano Escrivá y Albás) எனும் இயற்பெயர் கொண்ட இவர், ஸ்பெயின் (Spain) நாட்டின் சிறு நகரான “பர்பஸ்ட்ரோவில்” (Barbastro) பிறந்தவர் ஆவார். இப்புனிதரது தந்தை “ஜோஸ் எஸ்கிரிவா ஒய் கொர்ஸன்” (José Escrivá y Corzán) ஆவார். இவரது தாயாரின் பெயர், “மரிய டி லாஸ்” (María de los Dolores Albás y Blanc) ஆகும். இவர், தமது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஆவார். வியாபாரியும் ஜவுளி நிறுவனமொன்றில் பங்குதாரராகவுமிருந்த இவரது தந்தை வியாபாரத்தில் நஷ்டப்பட்டு, திவாலாகிப் போனார். அதன் காரணமாக, 1915ம் ஆண்டு “லோக்ரோனோ” (Logrono) நகருக்கு குடும்பத்தை அழைத்துச் சென்ற தந்தை, அங்கே ஒரு ஆடைகள் கடையில் எழுத்தராக பணியாற்றினார்.


உறைபனியில் வெறும் கால்களுடன் நடந்து சென்ற துறவியொருவரின் காலடித் தடங்கள், தம்மை ஏதோவொன்றுக்கு தேர்வு செய்திருப்பதாக இவரை உணர வைத்தது. தமது தந்தையில் பரிபூரண ஆசியுடன், கத்தோலிக்க திருச்சபையின் குருவாகும் தயாரிப்பில் ஈடுபட்டார். 1924ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 20ம் தேதியன்று, “சரகோசா” (Zaragoza) நகரில் திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். 1925ம் ஆண்டு, மார்ச் மாதம், 28ம் நாளன்று, அதே நகரில் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.


செபமும் தியானமும், கடவுளுடைய சித்தமாக அவர் கருதினவற்றை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள அவருக்கு உதவியது. 1928ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 2ம் நாளன்று, கத்தோலிக்கர்கள் தங்களின் மதச்சார்பற்ற பணிகளில் தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள “ஓபஸ் டேய்” (Opus Dei) (ஆங்கிலம்: கடவுளின் பணி) (English: Work of God), ஒரு வழி என்பதனைக் கண்டுணர்ந்தார். 1928ம் ஆண்டு “ஓபஸ் டேய்” (Opus Dei) நிறுவப்பட்டது. 1950ம் ஆண்டு, திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII) அதற்கு இறுதி அங்கீகாரம் வழங்கினார்.


ஜோஸ்மரிய எஸ்கிரிவா, 1975ம் ஆண்டு, ஜூன் மாதம், 26ம் நாளன்று, தமது 73 வயதில் மரித்தார்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு