
† இன்றைய திருவிழா † (நவம்பர் 1) ✠ அனைத்து புனிதர் பெருவிழா ✠ (ALL SAINTS’ DAY) கடைபிடிக்கும் சமயம்/ சபைகள்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion) லூதரனியம் (Lutheranism) மெதடிசம் (Methadism) மற்றும் பல கிறிஸ்தவ எதிர் திருச்சபைகள் (Various Protestant denominations) அனுசரிக்கும் நாள்: மேற்கு கிறிஸ்தவம் = நவம்பர் 1 கிழக்கு கிறிஸ்தவம் = தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு "கல்தேயாவின் ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்" மற்றும் "கிழக்கு கத்தோலிக்கம்" தொடர்புடைய திருச்சபைகள் = “உயிர்த்தெழுதல் ஞாயிறுக்குப்” பிந்தைய முதல் வெள்ளிக்கிழமை. இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்றவர்கள்; உலக மாந்தர்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டியாகவும் நின்றவர்கள்; தன்னலமற்று தியாக தீபங்களாக, இறைவனுக்காக தன் உள்ளத்தையும், உடலையும் அர்ப்பணித்துத் துன்பங்களை, இன்பங்களாக ஏற்று வாழ்ந்து மறைந்தவர்களைத்தான் தூயவர்களாக அல்லத...