† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 31)
✠ புனிதர் வோல்ஃப்காங்க் ✠
(St. Wolfgang of Regensburg)
தர்மம் செய்பவர் & ரேகன்ஸ்பர்க் நகர ஆயர் :
(The Almoner & Bishop of Regensburg)
பிறப்பு : கி.பி. 934
ஃபுல்லிங்கன், ரியுட்லின்ஜென், ஜெர்மனி
(Pfullingen, Reutlingen, Germany)
இறப்பு : அக்டோபர் 31, 994
புப்பிங், இஃபெர்டிங், ஆஸ்திரியா
(Pupping, Eferding. Austria)
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
புனிதர் பட்டம் : அக்டோபர் 8, 1051
திருத்தந்தை ஒன்பதாம் லியோ
(Pope Leo IX)
நினைவுத் திருநாள் : அக்டோபர் 31
பாதுகாவல் :
மூளை இரத்தக் கசிவு (Apoplexy), தச்சர்கள் மற்றும் மர வண்டிகள், பக்கவாதம், ரெகென்ஸ்பர்க் (Regensburg), ஜெர்மனி (Germany), வயிறு நோய்கள், பக்கவாதம்
புனிதர் வோல்ஃப்காங்க், கி.பி. 972ம் வருட கிறிஸ்துமஸ் தினம் தொடங்கி, மரிக்கும்வரை “பவேரியா’விலுள்ள” (Bavaria) “ரேகன்ஸ்பர்க்” (Regensburg) மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றியவர் ஆவார். இவர், ரோமன் கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இவரை புனிதராக ஏற்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் நன்கு அறியப்பட்ட மூன்று புனிதர்களில் இவர் ஒருவராவார்.
புனிதர் வோல்ஃப்காங்க், தென்மேற்கு ஜெர்மனியின் “ஸ்வாபியா” (Swabia) அமைப்பு குடும்பமொன்றினைச் சார்ந்தவர் ஆவார். “ரெய்செனவ்” (Reichenau Abbey) துறவற மடத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் தனது கல்வி கற்றார். இவர் இங்கே கற்கும்போதுதான், “ஹென்றி” (Henry of Babenberg) என்பவரின் நண்பரானார்.
பின்னர், 956ம் ஆண்டு, “டிரையர்” (Trier) உயர்மறைமாவட்ட பேராயராக ஹென்றி நியமிக்கப்பட்டார். பேராயர் ஹென்றியின் அழைப்பை ஏற்று டிரையரிலுள்ள பேராலயப் பள்ளிக்கு கி.பி. 964ம் ஆண்டு, ஆசிரியராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றார். அத்துடன், பல எதிர்ப்புகளுக்கிடையே உயர்மறைமாவட்டத்தின் சீர்திருத்தத்திற்காகவும் உழைத்தார். அச்சமயத்தில்தான், தானும் குருவாக வேண்டுமென்று விருப்பம் கொண்டார்.
கி.பி. 964ம் ஆண்டு, பேராயர் ஹென்றியின் மரணத்தின் பின்னர், வோல்ஃப்காங்க் “ஸ்விட்சர்லாந்து” (Switzerland) நாட்டின் “மரியா எய்ன்ஸியேடெல்ன்” (Abbey of Maria Einsiedeln) துறவு மடத்திலுள்ள “பெனடிக்டைன்” (Benedictine order) சபையில் இணைந்தார். அங்கு தனது விருப்பத்தை தெரிவித்து வார்த்தைப்பாடுகளை பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து “ஆக்ஸ்பர்க் ஆயர்” (Bishop of Augsburg) புனிதர் “உல்ரிச்” (St. Ulrich) அவர்களால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
கி.பி. 955ம் ஆண்டு, நடந்த “லெக்ஃபீல்ட் போரில்” (Battle of Lechfeld) மோசமான தோல்வியை தழுவிய “ஹங்கேரியர்கள்” (Hungarians), பண்டைய ரோமப் பேரரசின் பிராந்தியமான “பன்னோனியா’வில்” (Pannonia) குடியேறியிருந்தனர். வெகு காலம் வரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறாத இவர்கள், பேரரசுக்கு ஒரு நிலையான அச்சுறுத்தலாகவே இருந்தனர். தூய ரோமப் பேரரசின் (Holy Roman Empire) பேரரசர் “முதலாம் ஒட்டோ’வின்” (Emperor Otto I) விருப்பத்தின்படி, ஆயர் “உல்ரிச்” (St. Ulrich) வோல்ஃப்காங்க்கை ஹன்கேரியர்களிடையே சென்று அவர்களுடைய மனமாற்றத்திற்காக மறை போதிக்க கேட்டுக்கொண்டார். ஹன்கேரியர்களிடையே செல்வது ஆபத்தான காரியம் என்று தெரிந்திருந்தும், வோல்ஃப்காங்கின் மறைபோதக திறமையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். வோல்ஃப்காங்க், “பன்னோனியா” (Pannonia) சென்று, ஹங்கேரியர்களிடையே மறை போதனை செய்து அவர்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றி சாதனை புரிந்தார்.
கி.பி. 972ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் தேதி, “ரேகன்ஸ்பர்க்” ஆயர், மிக்கேல்” (Bishop Michael of Regensburg) மரணமடைந்தார். பேரரசரிடமிருந்து ஆயர் நியமனம் பெற்ற வோல்ஃப்காங்க், கி.பி. 972ம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆயராக பதவியேற்றார்.
இவர் ஏறக்குறைய 22 ஆண்டுகள் ரேகன்ஸ்பர்க் மறைமாவட்டத்தில் ஆயராக இருந்தார். தன்னுடைய பதவி காலத்தில் மறைமாவட்டத்திற்கு ஏராளமான பணிகளை செய்தார். பல துறவற இல்லங்களை கட்டினார். பெண் துறவிகள் கற்பதற்கென்று சில துறவற மடப்பள்ளிகளையும் கட்டினார். ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான வீடுகளையும், மருத்துவமனைகளையும் கட்டினார். இவர் வாழும்போதே மக்கள் இவரை புனிதர் என்று அழைத்தனர்.
வாழ்க்கையின் இறுதி காலத்தில் ஆயர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற இவர், வெளிப்படையான ஒரு அரசியல் மோதல் காரணத்தால், “அப்பர் ஆஸ்திரியாவின்” (Upper Austria) பொழுதுபோக்கு பகுதியான “சல்ஸ்கம்மெர்கட்” (Salzkammergut) எனுமிடத்திலுள்ள “வொல்ப்காங்” (Lake Wolfgang) எரிப்பகுதியில் தனிமைத் துறவியாய்ப் போனார். ஒரு வேட்டைக்காரரால் கண்டுபிடிக்கப்பட்ட இவர், மீண்டும் ரேகன்ஸ்பர்க் நகருக்கு கொண்டுவரப்பட்டார்.
ஒருமுறை, “லோவர் ஆஸ்திரியா’வின்” (Lower Austri) “மெல்க்” (Melk) மாவட்டத்திலுள்ள “போச்லர்ம்” (Pöchlarn) எனுமிடத்திற்கு “டனுப்” அல்லது “வோல்கா” (Danube or Volga River) நதியில் பயணிக்கையில் நோய்வாய்ப்பட்டு, “புப்பிங்” (Pupping) எனும் கிராமத்தில் வீழ்ந்தார். அவரது வேண்டுகோளின்படி “செயிண்ட் ஒத்மார் சிற்றாலயம்” (Chapel of Saint Othmar) கொண்டுவரப்பட்ட புனிதர் வோல்ஃப்காங்க், அங்கேயே மரித்தார்.
இவரது உடல் ரேகன்ஸ்பர்க்கில் உள்ள “புனிதர் எம்மரம்” (Crypt of St. Emmeram) நிலவறையில் அடக்கம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment