திருவருகை காலம் மூன்றாம் ஞாயிறு --- எண்ணம் போல் வாழ்வு உங்களுக்கு அழுமூஞ்சி குழந்தையைப் பிடிக்குமா ?அழகாக சிரிக்கிற குழந்தையைப் பிடிக்குமா ? கொஞ்சம் யோசிப்போம்!! சாமி கும்பிட கோவிலுக்குப் போனால் அங்கு சாமி சிரித்த முகத்தோடு அம்சமா இருந்தா பிடிக்குமா ?இல்லை கர்ணகடூரமா இருந்தா பிடிக்குமா ? ஏதாவது பொருள்கள் வாங்க போனாலும் அந்தக் கடைக்காரர் சிரித்த முகத்தோடு வரவேற்றால் பிடிக்குமா ? அல்லது சிடு சிடுசிடு என்றால் பிடிக்குமா ? எப்போதும் அழுதுகொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பவர்களை முதல் இரண்டு முறைக்கு அப்புறம் அவர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்வோம் இல்லையா? எண்ணம் போல் வாழ்வு. யார் யார் எண்ணம் எப்படியோ, அப்படியே எல்லாம். ஆதலால், புலம்பல்களையும், சோகங்களையும் விட்டுத்தள்ளுங்கள். எதுவும் இங்கு மாறி கொண்டேதான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. --------- திருவருகை காலம் மூன்றாம் ஞாயிறு நமக்குத் தரும் செய்தி மகிழ்ச்சி. ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் பிலிப்பியர் 4:4. திருவருகை காலத்தின் மையமாக இருக்கும் இந்த நாளில், இயேசு அவர் பிறப்பு மனித குலத்திற்கு, மகிழ்ச்...
Posts
Showing posts from December, 2023
- Get link
- X
- Other Apps
டிசம்பர் 10, 2023. திருவருகைக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு எசாயா 40: 1-5, 9-11 திபா 85: 8ab-9. 10-11. 12-13 2 பேதுரு 3: 8-14 மாற்கு 1: 1-8 திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு நமக்கு அமைதி என்னும் மைய கருத்தில் சிந்திக்க அழைக்கிறது. நீதியும், சமநிலையும் தொடரச் செய்வதை அமைதியின் வேலையாக உள்ளது. மனித புரிதலின்படி செயலற்ற அமைதி, செயல் அமைதி என வகை உண்டு. ஒருவர் இறந்த பிறகு உடல் அமைதியாக இருப்பது செயலற்ற அமைதி. ஒருவர் மற்றவரை மன்னித்து ஏற்றுக் கொள்வது செயல் அமைதி. அமைதி என்ற வட்டம் ஐந்து நிலைகளில் நம்மைச் சுற்றி விரிவடைகிறது. தனிநபர் அமைதி அதாவது நமது உள்ளம் அல்லது மன அமைதி. மனித குழுக்கள் இடையே அமைதி அதாவது குடும்பங்களுக்கு இடையே உள்ள அமைதி. மனித சமூகங்களுக்கு இடையேயான அமைதி அதாவது வீட்டிற்கு வெளியே மற்றவர்களோடு பகை இல்லா வாழ்வு வாழ்வதன் வழியாக பெரும் அமைதி. மாநிலங்களுக்கு இடையே அமைதி. நாடுகளுக்கு இடையே உள்ள அமைதி என, அமைதி 5 நிலைகளில் நம்மை சுற்றி விரிவடைந்து கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருந்தால்,அங்கு உள்ள வளங்கள் பகிரப்பட்டு, இரண்டு நாடுகளும் வளர்ச...