ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு

 ஆண்டவருடைய விண்ணேற்றம்


 மே 12 ஞாயிறு


 முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1:1-11


 இரண்டாம் வாசகம்: எபேசியர் 4: 1- 13 


 நற்செய்தி வாசகம்:

 மாற்கு 16: 15- 20


 நற்செய்தியை வாழ்வோம்


 இறை இயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே தாய்த் திருச்சபையானது இன்று

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது.


 இயேசுவின் விண்ணேற்றம் மனிதரால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர். தெரிந்து கொள்ள முடியாத ஒரு நிகழ்வு.


 இப்பெறுவிழா நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் ஒன்று. விண்ணகமே நம் தாய் நாடு(பிலிப் 3:20)


 இரண்டாவது கருத்து நீங்கள் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

 மூன்றாவது நீங்கள் என் சாட்சிகள்.


 மூன்று பேர் குருவிடம் வந்தார்கள். சாமி என் தந்தை இறந்துவிட்டார் அவர் ஞாபகச் சின்னமாக என்றும் நினைவில் இருக்கின்ற வகையிலே நான் ஏதாவது செய்ய ஆசைப்படுகின்றேன் என்று சொன்னார்கள்.

 அவர் ஒவ்வொருவராக கேட்டார்.

 மூத்த மகன் சொன்னான் அழகிய மணிமண்டபம் கட்டி பளிங்குக் கல்லாலே செதுக்கி நான் அழகுபடுத்த ஆசைப்படுகின்றேன் என்று சொன்னான்.


 இரண்டாவது பையன் சொன்னான் : நான் ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுத்து, பட்டு சேலை வாங்கிக் கொடுப்பேன் என்று சொன்னான்.


 மூன்றாவது மகன் சொன்னான் என் தந்தை என்ன சொன்னாரோ எவ்வாறு வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டினாரோ அதை நான் செய்யப் போகிறேன் என்று சொன்னான்.


 குருவானவர் அவன் சொல்வது தான் சரி தந்தை வாழ்ந்ததை வாழ்ந்து காட்டுங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகின்றார்.


 இனியவர்களே!

 நமது வாய் பேசுவதை விட நம்முடைய வாய்மை பேச வேண்டும் :

 அன்பு சாதிக்க வேண்டும் :

 நீதி நிலைக்க வேண்டும் :

 நேர்மையை என்பிக்க வேண்டும் :

 வாழ்க்கை சான்றாக வேண்டும்.


" நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர்களாக்குவேன்"(மத் 4:19) என்பதன் மறைபொருள் இதுதான். " திராட்சைக் கொடிகள் கணிதர வேண்டும்"(யோவா 15:16) " தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் "(யோவான் 20:21)" நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு என்று 

 கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பவுலடியாரும் " வாழ்வது நானல்ல, என்னில் வாழ்வது கிறிஸ்துவே "(கலா 2:20) என்று சொல்கிறார்.

 உன்னைக் கண்டவர் உன்னில் இயேசுவை காண வேண்டும்.


 வேலை வாய்ப்புக்காக நேர்காணலுக்குச் சென்றவர்களிடம், " உங்களை நாங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? " என்ற கேள்வியை முன் வைத்தார்கள்.


 பலரும் தங்கள் திறமைகளையும் முன் அனுபவத்தையும் காரணம் காட்டி பெருமை அடித்தார்கள்.


 ஒருவர் மட்டும், " நான் இந்தத் தொழிலுக்குப் புதிது. முன் அனுபவம் ஏதும் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நான் பொறுப்புணர்வோடு இருப்பேன். தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வேன் " என்றார். அவருக்கே பணி நியமனம் தரப்பட்டது.


 இன்றைய சூழலில் பெரும்பாலான நிறுவனங்களில் முன் அனுபவத்திற்கும் திறமைகளுக்குமே மதிப்பளிக்கப்படுகிறது.


 ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த முன் அனுபவமும் நற்செய்தி அறிவிப்பதற்கான திறமையும் இல்லாத எளியவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார். அவர்களிடமே விண்ணேற்றத்திற்கு முன் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றும் பொறுப்பை ஒப்படைத்தார்.


 எந்த ஊர் அமைப்பாக இருந்தாலும் தலைவரின் இறப்பிற்கு பின் தடுமாறுவது உண்டு.


 ஆனால் இயேசு ஏற்படுத்திய திருஅவை என்னும் நம்பிக்கைக் குழுமம் சற்று மாறுபட்டு காணப்படுகிறது.


 திருத்தூதர்கள் அனைவரும் தூய ஆவியாரைக் கொடையாகப் பெற்றுக் கொண்டு பணிகளில் தோய்வடையாமல் வாழ்ந்து நற்செய்திக்குச் சாட்சியாக உயிரைக் கொடுத்தார்கள்.

 இயேசுவுக்குச் சான்று பகிர்ந்த அனைவரும் இயேசுவின் கனவோடு தங்களை இணைத்துக் கொண்டனர். இயேசுவின் படிப்பினைகளைத் தாங்கள் செல்லும் எல்லாப் பகுதிகளுக்கும் துணிவோடு எடுத்துச் சென்று வாழ்ந்து காட்டியவர்களின் அசைக்க இயலா இறை நம்பிக்கையை நாமும் பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.

 

 பொறுப்புள்ள கிறிஸ்தவர்களாக வாழ நாம் எடுக்கும் முயற்சிகள் என்ன?

 திருத்தூதர்களின் உள்ளத்தில் சுடர் விட்ட அன்பு,தியாகம்,பொறு மை,மன்னிப்பு மற்றும் பொறுப்புணர்வு நம் குடும்ப வாழ்வில் மிளிர வேண்டும். அதுவே விண்ணேற்றமடைந்த ஆண்டவருக்கு நாம் செலுத்தும் சாட்சியமாகும்.

Comments

Popular posts from this blog