அக்டோபர் 1, 2023. பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு. லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா.
அக்டோபர் 1, 2023. பொதுக்காலம் 26ஆம் வாரம் – ஞாயிறு. லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா. அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? பிலிப்பியர் 2: 1 பல ஆயிரம் மைல்கள் நடந்து, பல லட்சம் பேரை கிறிஸ்தவர்களாக மாற்றியவரே, புனித சவேரியார். இவர் செய்த நற்செய்தி பணியை, இவரை போல முழு ஈடுபாட்டோடு யாரும் செய்வது அரிது. இவரை மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலர் என்று திருஅவை அழைத்தது. இந்தப் புனிதருக்கு இணையாக, மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலராக, வெறும் நான்கு சுவர்களுக்கு நடுவில் இருந்து உயர்ந்தவரே, லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா. 14 வயதில் கன்னியர் மடத்தில் சேர விரும்பும் ஒரு சிறுமி, தான் நினைத்ததை செய்து முடிக்கிறார். 25 ஆவது வயதை அடைவதற்கு முன்பே இறைவனடி சேர்ந்தார். இவர் ஒரு சிறுமியாக இருந்தாலும் கூட அவர் செய்த செயல்களை மிகப்பெரியவர்களால் செய்வது கடினம். யார் அந்த சிறுமி? அந்த சிறுமி செய்த சாதனைகள் தான் என்ன? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எலலாம். அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவரே, லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா. புனிதர்...