இன்றைய புனிதர் † (ஏப்ரல் 1) ✠ கிரனோபிள் புனிதர் ஹக் ✠ (St. Hugh of Grenoble)
† இன்றைய புனிதர் † (ஏப்ரல் 1) ✠ கிரனோபிள் புனிதர் ஹக் ✠ (St. Hugh of Grenoble) கிரனோபிள் ஆயர்: (Bishop of Grenoble) பிறப்பு: கி.பி. 1053 சடீயுநியுஃப்-சுர்-இசெர், ஃபிரான்ஸ் (Châteauneuf-sur-Isère, France) இறப்பு: ஏப்ரல் 1, 1132 கிரனோபிள் (Grenoble) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) புனிதர் பட்டம்: ஏப்ரல் 22, 1134 திருத்தந்தை 2ம் இன்னொசென்ட் (Pope Innocent II) நினைவுத் திருநாள்: ஏப்ரல் 1 பாதுகாவல்: க்ரெனோபிள் (Grenoble), ஃபிரான்ஸ் (France), தலை வலியிலிருந்து (Against Headache) புனிதர் ஹக், கி.பி. 1080ம் ஆண்டிலிருந்து, கி.பி. 1132ம் ஆண்டு, தமது மரணம் வரை, சுமார் ஐம்பத்திரண்டு வருடங்கள் கிரனோபிள் (Grenoble) மறை மாவட்டத்தின் ஆயராக பணியாற்றியவர் ஆவார். அவர், கிரிகோரியன் சீர்திருத்தத்திற்கு ஆதரவாகவும், அதேவேளை "வியென்னாவின் பேராயராகவும்" (Archbishop of Vienne) பின்னாளில் "திருத்தந்தை இரண்டாம் கல்லிக்ஸ்துஸ்" (Pope Callixtus II) அவர்களாகவும் இருந்த "கய்" (Guy of Burgundy) என்பவரை எதிர்த்தார். கி.பி. 1053ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்...