இன்றைய புனிதர் † (ஜூன் 20) ✠ மக்டேபர்க் புனிதர் அடால்பர்ட் ✠ (St. Adalbert of Magdeburg)

 † இன்றைய புனிதர் †

(ஜூன் 20)



✠ மக்டேபர்க் புனிதர் அடால்பர்ட் ✠

(St. Adalbert of Magdeburg)


மக்டேபர்க் பேராயர்/ விஸ்செம்பௌர்க் மடாதிபதி:

(Archbishop of Magdeburg and Abbot of Wissembourg)


பிறப்பு: கி.பி. 910

அல்சாஸ் அல்லது லோர்ரெய்ன், ஃபிரான்ஸ்

(Alsace or Lorraine, France)


இறப்பு: ஜூன் 20, 981

ஸ்செர்பேன், மெர்ஸ்பர்க்’ல் கியூசா, சாக்ஸனி-அன்ஹால்ட், ஜெர்மனி

(Zscherben (Contemporarily in (Former) Geusa, in Merseburg, Saxony-Anhalt, Germany)


ஏற்கும் சபை: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)


நினைவுத் திருவிழா: ஜூன் 20


மக்டேபர்க் புனிதர் அடால்பர்ட் (Adalbert of Magdeburg), மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பேசப்படும் மொழியான “ஸ்லாவிய” மொழி பேசும் மக்களின் அப்போஸ்தலரும் (Apostle of the Slavs), “மக்டேபர்க்” (Magdeburg) உயர்மறைமாவட்டத்தின் முதல் பேராயருமாவார் (Archbishop). இவர், இன்றைய கிழக்கு ஜெர்மனியின் (Eastern Germany) “எல்ப்” (Elbe) நதிக்கரையோரம் வாழ்ந்திருந்த “போலாபியன் சிலாவிய” (Polabian Slaves) இன ஆதிவாசி மக்களின் வெற்றிகரமான மறைப்பணியாளருமாவார்.


இவர், கி.பி. 910ம் ஆண்டு, ஃபிரான்ஸ் (France) நாட்டின் “அல்சாஸ் அல்லது லோர்ரெய்ன்” (Alsace or Lorraine) பிராந்தியத்தில் பிறந்தவர் ஆவார். ஜெர்மனியின் (Germany) “டிரையர்” (Trier) மாகாணத்திலுள்ள “தூய மேக்ஸிமினஸ்” (Benedictine Monastery of St. Maximinus) “பெனடிக்டைன்” துறவுமடத்தின் ஜெர்மன் துறவி (German Monk) ஆவார். ரோமன் கத்தோலிக்க (Roman Catholic Bishop) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட இவர், கி.பி. 961ம் ஆண்டு, “கீவன் ரஸ்” (Kievan Rus) என்ற நாட்டுக்கு அனுப்பப்பட்டார். (தற்போதைய “பெலாரஸ்”, “உக்ரைன்”, மற்றும் “ரஷியா” (Belarus, Ukraine, and Russia) ஆகிய நாடுகளின் மக்கள், “கீவன் ரஸ்” (Kievan Rus) மக்களை தங்களது கலாச்சார முன்னோர்கள் என்கின்றனர்).


“கீவன் ரஸ்” நாட்டின் இளவரசி “ஓல்கா” (Princess Olga of Kiev) “பேரரசர் முதலாம் பெரிய ஓட்டோ’விடம்” (Emperor Otto I (the Great) தமக்கு ஒரு ரோமன் கத்தோலிக்க மறைப்பணியாளர் தருமாறு வேண்டினார். இளவரசியின் மகன் “ஸ்யடோஸ்லவ்” (Svyatoslav) என்பவன் இதனை எதிர்த்தான். அடால்பர்ட் அங்கு வந்து சேர்ந்த வேளையிலே அவன் இளவரசியின் கிரீடத்தை திருடிச் சென்றான். அடால்பர்ட்டின் மறைப்பணி துணைவர்கள் கொல்லப்பட, அடால்பர்ட் அரிதாக உயிர் தப்பினார். “கீவன் ரஸ்” பின்னர் “கான்ஸ்டன்டினோபில்” (Constantinople) மறைப்பணியாளர்களால் மனம் மாற்றப்பட்டு, “பைசான்டைன்” (Byzantinie Christianity) கிறிஸ்தவத்தின் அங்கமாக மாறியது.


“கீவன் ரஸ்” நாட்டிலிருந்து உயிர் தப்பியோடிய அடால்பர்ட், ஜெர்மனியின் (Germany) “மெய்ன்ஸ்” (Mainz) பயணமானார். பின்னர், அங்கே “அல்சாஸ்” (Alsace) எனுமிடத்திலுள்ள “விஸ்செம்பௌர்க்” (Abbot of Wissembourg) மடத்தின் மடாதிபதியானார். அங்கே அவர் துறவியரின் கல்வி முன்னேற்றத்துக்காக உழைத்தார். பின்னர் அவர் சமகால ஜெர்மனியிலுள்ள “மக்டேபர்க்” உயர்மறைமாவட்டத்தின் (First Archbishop of Magdeburg) முதல் பேராயராக நியமிக்கப்பட்டார்.


கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளின் மறைப்பணி தளங்களாக்கும் நோக்கங்களுடன் “ஹம்பர்க்” மற்றும் ப்ரேமன்” (Archepiscopacies of Hamburg and Bremen) ஆகிய உயர்மறைமாவட்டங்கள் நிறுவப்பட்டன.


கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் “சிலேவிய” (Slavs) மக்களிடையே மறைப்பணியாற்ற பணியாளர்களை அடால்பர்ட்டின் “மக்டேபர்க்” (The Archdiocese of Magdeburg) உயர்மறைமாவட்டம் அளித்தது.


“நௌம்பர்க்” (Numberg), “மெய்ஸ்சென்” (Meissen), “மெர்ஸ்பர்க்” (Merseburg), “ப்ரேன்டென்பர்க்” (Brandenburg), “ஹவெல்பர்க்” (Havelberg) மற்றும் “போஸ்நன்” (Poznan), “போலந்து” (Poland) ஆகிய இடங்களில் மறைமாவட்டங்களை உருவாக்கிய அடால்பர்ட், கி.பி. 981ம் ஆண்டு, ஜூன் மாதம், 20ம் நாளன்று மரித்தார்.

Comments

Popular posts from this blog