† இன்றைய புனிதர் †

(ஜூலை 6)



✠ புனிதர் நஸாரியா இக்னேஸியா மார்ச் மெசா ✠

(St. Nazaria Ignacia March Mesa)


மறைப்பணியாளர், நிறுவனர்:

(Religious and Founder)


பிறப்பு: ஜனவரி 10, 1889

மேட்ரிட், ஸ்பெயின் அரசு

(Madrid, Kingdom of Spain)


இறப்பு: ஜூலை 6, 1943 (வயது 54)

பினோஸ் எயர்ஸ், அர்ஜன்ட்டினா

(Buenos Aires, Argentina)


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 27, 1992

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)


புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018

திருத்தந்தை ஃபிரான்சிஸ்

(Pope Francis)


நினைவுத் திருநாள்: ஜூலை 6


பாதுகாவல்:

சிலுவைப் போர் மிஷனரிகள் (Missionaries of the Crusade)


புனிதர் நஸாரியா இக்னேஸியா மார்ச் மெசா, ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க (Spanish Roman Catholic Professed Religious) அருட்சகோதரியாவார். இவர், சிலுவைப் போர் மிஷனரிகள் (Missionaries of the Crusade) எனும் அமைப்பினை நிறுவியவருமாவார். ஸ்பெயின் நாட்டிலிருந்து மெக்ஸிகோ நாட்டிற்கு புலம்பெயர்ந்து குடியேறிய அவர் அங்கு ஒரு ஆன்மீக சபையில் சேர்ந்தார். “பொலீவியா” மாநிலத்தில் (Bolivia) தமது மறைப்பணிகளை தொடங்கிய அவர், தமது வாழ்நாளின் பெரும் பகுதியை அங்கேயே கழித்தார். ஸ்பெயினில் (Spain) தாம் உருவாக்கிய சமய சபையை பரப்புவதற்காக அவர் சுருக்கமாகச் செயல்பட்டார். பின்னர், தாம் நிறுவிய தமது சொந்த சபையை விட்டுவிட்டு அர்ஜென்ட்டினா (Argentina) நாட்டுக்கு சென்ற அவர், பின்னர் அங்கேயே மரித்தார்.


கி.பி. 1889ம் ஆண்டு, மேட்ரிட் (Madrid) நகரில், “ஜோஸ்” (José Alejandro March Reus) மற்றும் “நஸாரியா” (Nazaria de Mesa Ramos de Peralta) ஆகிய தம்பதியரின் பத்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்த இவர், தாம் பிறந்த அதே மாதத்தில் ஒரு நாள், தமது சொந்த பங்கான புனிதர் சூசையப்பர் ஆலயத்தில் திருமுழுக்கு பெற்றார். கி.பி. 1898ம் ஆண்டு, புதுநன்மை (First Communion) அருட்சாதனம் பெற்றார். அதே வருடம், “நஸாரியா, நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்ற இயேசு கிறிஸ்துவின் குரல் இவருக்கு கேட்டது. ஆன்மீக வாழ்வில் நுழையும் இவரது எண்ணம், இவரது பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அதனை தடுத்த அவர்கள், அவர் அதற்கான அருட்சாதனங்களைப் பெறுவதையும் தடை செய்தனர். நஸாரியா, செவில் (Seville) நகரிலுள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கி, “புனித அகுஸ்தினார் சபையின்” (Order of St. Augustine) மேற்பார்வையில் கல்வி கற்றார். கி.பி. 1901ம் ஆண்டு வீடு திரும்பிய இவர், 1902ம் ஆண்டு, அப்போதைய “செவில் பேராயரான” (Archbishop of Seville) அருளாளர் “மார்செலோ ஸ்பினோலா ஒய் மேஸ்ட்ரே” (Blessed Marcelo Spinola Maestre) என்பவரிடமிருந்து உறுதிப்பூசுதல் (Confirmation) அருட்சாதனம் பெற்றார். அவரது பாட்டி, அவர் தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையில் (The Order of Saint Francis) சேர அனுமதியளித்தார். அவளுடைய பெற்றோர்கள் தங்கள் மகள் மீது தாங்கள் விதித்திருந்த மத கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஆரம்பித்தார்கள்.


1904ம் ஆண்டில் அவரது தந்தை மெக்ஸிகோவுக்கு செல்ல விரும்பினார். ஆனால் இதற்கு முன்னர் அவரும் மூன்று சகோதரிகளும் தங்களுடைய பாட்டி வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். 1904ம் ஆண்டின் இறுதியில், கடுமையான பொருளாதார நிலைமைகள் காரணமாக, நஸாரியா பின்னர் மெக்ஸிகோவிற்கு இடம்பெயர்ந்தார். 1908ம் ஆண்டு, ஜூலை மாதம், 12ம் தேதி, “கைவிடப்பட்ட முதியோரின் சின்னஞ்சிறு சகோதரியர்” (Little Sisters of the Abandoned Elderly) இல்லத்தில் சேர்ந்தார். பொலிவியா (Bolivia) மாநிலத்திலுள்ள ஓரூரோ (Oruro) நகருக்கு அனுப்பப்பட்டார். 1908ம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், நோய்வாய்ப்பட்ட இவர், பலவீனமடைந்தார். 1909ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 9ம் நாளன்று, தமது சீருடைகளை பெற்றுக்கொண்ட இவர், “இயேசுவின் புனித தெரேசாவின் நஸாரியா” (Nazaria of Saint Teresa of Jesus) எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராகப் பெற்றுக்கொண்டார்.


நஸாரியா, பின்னர் போலந்து நாட்டுக்கான அப்போஸ்தலிக்க பேராண்மைத் தூதரான (Apostolic Nuncio to Poland) “ஃபிலிப்போ கோர்டேசி” (Filippo Cortesi) என்பவரைச் சந்தித்தார். உலகை மறு கிறிஸ்தவ மயமாக்கல் சம்பந்தமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்மீக சபையை நிறுவும் பணிகளில் அவர் ஆர்வமாய் இருந்தார். இவர்கள் பொலிவியா (Bolivia) மாநிலத்திலுள்ள ஓரூரோ (Oruro) நகரில் சந்தித்துக்கொண்டபோது இது சம்பந்தமாக விவாதித்தனர். இருவரும் 1924ம் ஆண்டு, ஜூன் மாதம், 22ம் தேதியன்று சந்தித்தனர். ஆகஸ்ட் மாதம் நஸாரியா காய்ச்சலில் வீழ்ந்தார். 1924ம் ஆண்டு, அன்னை கன்னி மரியாளின் விண்ணேற்பு விழா தினமான ஆகஸ்ட் மாதம், 15ம் தேதியன்று, அவரைச் சந்தித்த “ஃபிலிப்போ கோர்டேசி” (Filippo Cortesi), அவருக்கு அன்னை மரியாளின் திருஉருவப் படம் ஒன்றினை நல்லெண்ண அடையாளமாக கையளித்தார். நோயிலிருந்து குணமடைந்த நஸாரியா, 1925ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ம் நாளன்று, பொலிவியா (Bolivia) மாநிலத்தின் “லா பஸ்” (La Paz) நகர் சென்று, அவரது நண்பர் கோர்டெஸி உடன் மேலும் கலந்துரையாடலை நடத்தினார். 1925ம் ஆண்டு, மார்ச் மாதம், 23ம் தேதி, “ஃபிலிப்போ கோர்டேசி” ஐந்து புதிய ஆயர்களுக்கு அருட்பொழிவு செய்வித்த நிகழ்வில் கலந்துகொண்டார்.


1925ம் ஆண்டு, ஜூன் மாதம், 25ம் நாளன்று, புதிய சபை நிறுவும் பணிகளுக்காக தாம் இருந்த சபையை விட்டு விலகிய நஸாரியா, தம்முடன் பத்து பொலிவிய பெண்களை (Bolivian women) இம்முயற்சியில் இணைவதற்காக அழைத்து வந்தார். 1825ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 18ம் தேதி, கோர்டெஸி முதன்முதலில் அடிப்படை பணிகளை அங்கீகரித்தார். 1926ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 12ம் தேதி, “சிலுவைப் போர் மிஷனரிகள் சபை” (Missionaries of the Crusade) நிறுவப்பட்டது. 1927ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 12ம் நாளன்று, இது மறைமாவட்ட அங்கீகாரம் பெற்றது. பின்னர், இவர் மரித்து சரியாக நான்கு வருடங்களின் பின்னர், 1947ம் ஆண்டு, ஜூன் மாதம், 9ம் தேதி, திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII) இச்சபையை அங்கீகரித்தார்.


1930ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் தேதி, சபையின் முதல் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். 1934ம் ஆண்டு, ரோம் நகரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட நஸாரியா, அங்கே திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI) அவர்களை சந்தித்தார். 1935ம் ஆண்டில் மேட்ரிட் பயணித்த நஸாரியா, அங்கே அவர் ஆன்மீக பயிற்சிகளுக்காக ஒரு இல்லம் நிறுவினார். ஆனால் ஆபத்தான, மற்றும் மத-விரோத ஸ்பானிஷ் உள்நாட்டுப் போர் (Spanish Civil War) காரணமாக அவர் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது.


நஸாரியா, 1938ம் ஆண்டு, அர்ஜென்ட்டினா (Argentina) நாட்டிலுள்ள “பியூநோஸ் எயர்ஸ்” (Buenos Aires) நகர் போய் சேர்ந்தார். 1943ம் ஆண்டு, மே மாதம் முதல் நிமோனியா (Pneumonia) காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், “ரிவாடாவியா” மருத்துவமனையில் (Rivadavia Hospital) அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாதம் நோய்ப் படுக்கையில் இருந்தார். “நுரையீரலில் இரத்தக் கசிவு” (Hemoptysis) நோய் காரணமாக, இவர் ஜூலை மாதம், 6ம் நாளன்று மரித்தார்.


1992ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் நாளன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்களால் இவருக்கு முக்திபேறு பட்டமளிக்கப்பட்டது. 2018ம் ஆண்டில், இவரால் நிகழ்ந்த அதிசயம் ஒன்றினை உறுதிப்படுத்திய திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) அவர்கள், 2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14ம் நாளன்று இவரை புனிதராக உயர்த்தி அருட்பொழிவு செய்தார்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு