† இன்றைய புனிதர் †

(செப்டம்பர் 20)



✠ புனிதர் யூஸ்டேஸ் ✠

(St. Eustace)


மறைசாட்சி/ புனித படைவீரர்:

(Christian martyr and soldier saint)


பிறப்பு: ---


இறப்பு: கி.பி. 118


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் திருச்சபை

(Anglican Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodoxy)


பாதுகாவல்: 

கடினமான சூழ்நிலைகள், தீ தடுப்பு, தீயணைப்பு வீரர்கள், வேட்டைக்காரர்கள், வேட்டையாடுதல், சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள், மேட்ரிட் (Madrid)


நினைவுத் திருநாள்: செப்டம்பர் 20


புனிதர் யூஸ்டேஸ், பிளாசிடஸ் (Placidus) என்ற கிரேக்க இயற்பெயர் கொண்டவர். ஆதியில் கிறிஸ்தவரல்லாத இவர், பொது ரோம இனத்தைச் சேர்ந்தவராவார்.


இவர், 'ட்ராஜன்' (Trajan) எனும் ரோமப் பேரரசரிடம் பணிபுரிந்தார். ஒருமுறை, ரோம் நகரின் அருகே 'டிவோலி' (Tivoli) எனும் இடத்தில் மான் வேட்டையாடினார். அவ்வேளையில், அவர் அதிசயத்தக்கவகையில் ஒரு 'சிலுவைப்பாடு' திருக்காட்சியைக் கண்டார். அதுவும், அந்த 'சிலுவைப்பாடு' காட்சி, இறந்துபோன மானின் இரண்டு கொம்புகளுக்கிடையே நிகழ்ந்தது. உடனடியாக மன மாற்றம் கொண்ட அவர், தமது குடும்பத்தினருடன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். தமது பெயரை “யூஸ்டேஸ்” (Eustace) என்று மாற்றிக்கொண்டார்.

ரோம பேரரசன் “ஹட்ரியான்” (Hadrian) ஆட்சி செய்த காலத்தில், இவரது மனைவி “தியோபிஷ்டா” (Theopista) மற்றும் அவரின் மகன்கள் “அகபியஸ்” (Agapius), “தியோபிஸ்டஸ்” (Theopistus) என்பவர்களுடன் சேர்த்து துன்புறுத்தப்பட்டார். யூஸ்டேஸ் தன்னிடம் இருந்த உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு வழங்கி மறைப்பணியை ஆற்றியுள்ளார். இவர் தனது 12 வயதிலிருந்து திருச்சபைக்காக உழைத்தார்.


சாத்தானின் தொடர்ந்த அழிவுகள் அவரை சோதித்தன. அவரது சொத்துக்கள் திருட்டு போயின. அவரது பணியாட்கள் பிளேக் எனும் கொள்ளை நோயால் மடிந்தனர். அவரது குடும்பத்தினர் கடல் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் பயணம் செய்த கப்பலின் தலைவன் இவரது மனைவி “தியோபிஸ்ட்டா”வை (Theopista) கடத்தினான். தமது இரு மகன்களான (Agapius and Theopistus) 'அகபியஸ்' மற்றும் 'தியோபிஸ்டஸ்' ஆகியோருடன் நதியைக் கடந்தார் யூஸ்டேஸ். ஆனால் அவரது ஒரு மகன் ஓநாய்க்கும், இன்னொரு மகன் சிங்கத்துக்கும் பலியாயினர். மனைவியையும் இழந்து, பிள்ளைகளையும் மரணத்துக்கு பறிகொடுத்த புனிதர் தமது விசுவாசத்தை இழக்கவில்லை.


மற்றவர்களின் பலவீனங்களை அறிந்து, அவைகளிலிருந்து வெளியேற உதவினார். இவரின் நல்ல குணங்களை அறிந்த எதிரிகள், சமுதாயத்தில் இவரின் பெயரை கெடுக்க திட்டமிட்டனர். கொடூரமான பழிகளை அவரின் மேல் சுமத்தினர். பல அநீதிகளை செய்ததாக குற்றம் சாட்டினர். அப்போதும் கூட இவர் பொறுமையை கடைபிடித்து, கடவுளை மட்டுமே தன் வாழ்வின் மையமாக கொண்டு செயல்பட்டார். எதிரிகளின் இதயங்களிலும், ஈரத்தை ஏற்படுத்தி இறையுறவை வளர்த்து, மனமாற்றினார்.


ரோம பேரரசன் “ஹட்ரியான்” (Hadrian) இவரை கொதிக்கும் கொப்பரையிலிட்டு கொலை செய்ததாக ஐதீகம். ஆனால், இதனை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்தது. இவர் இறந்தபிறகு இவரின் உடலிலிருந்த எலும்புகள் அனைத்தையும் ஒன்றாக் சேர்த்து 1567ல் பாரிஸ் நாட்டில் புனித எஸ்தாக்கியுஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டது. இவர் நீதியோடும், நேர்மையோடு வாழ்ந்தார். மிகவும் எளிமையான வாழ்வை வாழ்ந்தார். சாதி, மதம் பார்க்காமல் பணியாற்றினார். மனசாட்சிக்கு மட்டுமே செவிசாய்த்தார். இவருக்கு தீங்கு செய்தவர்களிடமும் அன்பாக இருந்தார். அவர்களை மன்னித்து, அவர்களிடத்தில் அளவில்லா அன்பு காட்டி, வாழ்வையும் மாற்றினார். பிறரை பாராட்டுவதிலும் எப்போதும் முதலிடம் வகித்தார்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு