† இன்றைய புனிதர் †

(அக்டோபர் 3)


✠ புனிதர் ஜெரார்ட் ✠

(St. Gérard of Brogne)


மடாதிபதி:

(Abbot)


பிறப்பு: கி.பி. 895


இறப்பு: அக்டோபர் 3, 959


ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)


முக்கிய திருத்தலம்:

செயிண்ட்-ஜெரார்ட், நாமூர்

(Saint-Gérard, Namur)


நினைவுத் திருநாள்: அக்டோபர் 3


பாதுகாவல்:

செயிண்ட்-ஜெரார்ட், நாமூர்

(Saint-Gérard, Namur)


புனிதர் ஜெரார்ட், “ப்ரோன் மடாலயத்தின்” (Brogne Abbey) மடாதிபதியாவார். இவர், பெல்ஜியம் (Belgium) நாட்டின் “நாமூர்” (Namur) மாகாணத்தின் “மெட்டேட்” (Mettet) நகராட்சியின் ஒரு கிராம வாசியாவார். இவர், “லோயர் ஆஸ்ராசியாவின்” (Lower Austrasia) பிரபுக்களின் குடும்பத்தில் (Family of Dukes) உறுப்பினருமாவார். ஆரம்பத்தில் ஒரு இராணுவ சிப்பாயான இவர், தமது குடும்ப சிற்றாலயம் ஒன்றினை பெரிய தேவாலயமாக கட்டி எழுப்பினார். பின்னர் “செயிண்ட் டெனிஸ்” (Saint-Denis) எனுமிடத்தில் துறவியாக மாறினார். பின்னர், குருத்துவம் பெற்ற இவர், “ப்ரோன்” நகருக்குச் சென்றார். அங்கே, மதகுருக்களின் விழிப்பற்ற விரக்தியை எதிர்த்துப் போராடி, அவர்களை உண்மையான துறவியர்களாய் மாற்றினார். அவர், மடாலயத்திற்கு அருகேயுள்ள ஒரு சிறு அறையில் தனிமையில் ஓய்வு பெற்றார்.


“காம்பிராயின் பேராயர்” (Archbishop of Cambrai), “ஹெயினால்ட்” (Hainault) நகரில் உள்ள “செயிண்ட்-கிஸ்லெய்ன்” சமூகத்தை (Community of Saint-Ghislain) சீர்திருத்தும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார். அவர், துறவியரின் நியதிகளை மாற்றியமைத்தார். அவர் இறுதியில் தற்போதைய பெல்ஜியத்தின் பகுதிகளில், 18 பிற மடாலயங்களின் தலைவராக ஆனார். அவர் கி.பி. 944ம் ஆண்டில் “செயிண்ட் பெர்டினின்” மடாலயத்தை மறுசீரமைத்தபோது, கருத்து வேறுபடுகிற துறவிகள், அங்கிருந்து “இங்கிலாந்தின் அரசன் முதலாம் எட்மண்ட்டிடம்” (King Edmund I of England) ஓடிப் போயினர். தமது வாழ்நாளின் முடிவில், அவர் மீண்டும் ப்ரோன் நகரின் மடாலய சிறு அறையில் ஓய்வு பெற்றார்.


ப்ரோன் மடாலயத்தின் (Brogne Abbey) சிறப்புரிமைகளை உறுதிப்படுத்தும் திருத்தந்தையின் அங்கீகாரத்தினை (Papal Bull) பெறுவதற்கா


க அவர் ஒருமுறை ரோம் பயணித்தார்.

Comments

Popular posts from this blog

ஆண்டவருடைய விண்ணேற்றம் மே 12 ஞாயிறு