Posts

Showing posts from June, 2023
 பொதுக்காலம் 13ஆம் வாரம் – ஞாயிறு 02 /07/ 2023* https://kuttyjesu.blogspot.com/2023/06/13-02-07-2023-2-4-8-11-14-16.html 2 அரசர்கள் 4: 8-11, 14-16அ. திருப்பாடல் 89. உரோமையர் 6: 3-4, 8-11. மத்தேயு 10: 37-42. இறைவன் மீது அன்பு. இன்றைய நற்செய்தி வாசகம் மத்தேயு 10 : 37 - 42 வரை உள்ள பகுதிகளை சற்று நேர்மறையாக சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுக்கிறேன். இயேசு கூறுவது, என்னுடைய சீடர்கள் யாரென்றால் தன் தந்தை, தாய், மகன் மற்றும் மகளை விட என்னிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ளவர்களும், தமது சிலுவையை சுமந்து கொண்டு என்னை பின்பற்றுபவர்களும், எனக்காக தன் உயிரை இழப்பவர்களுமே என் சீடராவார். இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசு தம் சீடர்களை பணிக்கு அனுப்பும் முன் வழங்கும் அறிவுரையின் ஒரு பகுதியாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.  இயேசுவின் இந்த அறிவுரை பகுதியானது, இயேசுவை பின்பற்ற விரும்பியவர்கள் தங்களுடைய தந்தை தாய் மகன் மகளை விட்டுவிட வேண்டுமென்றல்ல, ‌மாறாக‌, தன் தந்தை, தாய், மகன் மகளை விட அவர் மீது அன்பு கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். மாதா, பிதா, குரு தெய்வம் என்று தமிழில் பழமொழி ஒன்று உண்டு.

அறத்துப்பால் பாயிரவியல் அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து குறள் 1

 1. அகர முதல மயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள்.    எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின் வீச்சுதான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது' என்று நினைத்தது!    உள்ளிருந்து அவர் மனைவி வாசுகி வந்தார். "என்ன யோசனை கணவரே?" என்றார். "மனித வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி ஒரு நீதி நூல் எழுதலாம் என்று இருக்கிறேன்" என்றார் திருவள்ளுவர். "எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும். நம் நாட்டில் நீதி நூல்கள் ஆயிரம் இருக்கின்றன, ஆனால் அவற்றை யாரும் படிப்பதில்லை." "அதனால்தான் எளிய செய்யுள் வடிவில் அதுவும் ஒவ்வொரு செய்யுளும் ஒன்றே முக்கால் அடி நீளத்தில் இருக்கும்படி எழுதலாம் என்று நினைக்கிறேன்." "நல்ல யோசனை. குறுகிய பா என்றால் படிக்கத் தூண்டுவதாக இருக்கும்." "என்ன சொன்னாய்? குறுகிய பா! அருமையான சொற்றொடர். என் நூலுக்குக் குறள் என்றே

பொதுக்காலம் 12ஆம் வாரம் – வெள்ளி 30 /06/ 2023*

 பொதுக்காலம் 12ஆம் வாரம் – வெள்ளி 30 /06/ 2023* I தொடக்க நூல் 17: 1, 9-10, 15-22 திருப்பாடல் 128: 1-2, 3, 4-5 (4) II மத்தேயு 8: 1-4. கடவுளை வெற்றி கொண்டவர்களாய். ஒரு ஆசிரியரும் ஒரு மாணவனும், நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பின்வருமாறு. மாணவன் : ஏன் சார், கடவுளை நம்மால் வெற்றி கொள்ள முடியுமா? ஆசிரியர் : கண்டிப்பா முடியுமே. மாணவன் : அது எப்படி சாத்தியம்! ஆசிரியர் : நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்ந்தால் எதுவும் சாத்தியம்தான்...  எல்லாம் சரியாகிவிடும் என்பது 'நம்பிக்கை' எல்லாம் சரி செய்து விடலாம் என்பது 'தன்னம்பிக்கை' எல்லாம் சரி செய்து தான் ஆக வேண்டும் என்பது 'வாழ்க்கை' என்ற ஒரு சிறிய தத்துவத்தை கூறினாராம். நம்பிக்கை, தன்னம்பிக்கை, வாழ்க்கை என்று வாழ்க்கை சக்கரத்திலே நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். யாரெல்லாம் இந்த மூன்று நிலைகளிலும் சரியான முறையில் தடுமாறாமல் மேலாண்மை செய்யும் பொழுது அவர்களால் அவர்களது வாழ்க்கையை வெற்றி கொள்ள முடியும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் தொழுநோயாளர் நலம் பெறும் நிகழ்வானது, மத்தேயு நற்ச

பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

 பொதுக்காலம் 12-ம் ஞாயிறு  எரேமியா 20:10-13.  திருப்பாடல் 69 உரோமையர் 5:12-15. மத்தேயு 10:26-33 அது ஒரு பழமையான கட்டிடம், அங்கு எதிர்பார்க்காத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தின் போது அனைவரும் அந்த கட்டிடத்தை விட்டு வெளியில் வந்து விட்டார்கள், ஆனால் ஒரு குழந்தை மட்டும் இரண்டாம் தளத்தில் மாட்டிக்கொண்டது, அந்தக் குழந்தை ஜன்னலோரம் வந்து பார்த்தபொழுது, கீழ்த்தளம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் குழந்தை தனது இறப்பு நெருங்கி விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், கீழிருந்து ஒரு குரல் கேட்டது, கீழே குதித்து விடு உன்னை நான் பிடித்துக் கொள்வேன் என்று அந்தக் குழந்தையின் தந்தை கூறியது, அந்தக் குழந்தைக்கு கேட்டது. ஆனால் கீழே பார்த்தபோது அங்கு நெருப்பு புகைமூட்டம் மட்டுமே கண்களுக்கு தெரிந்தது.u  குழம்பிப் போயிருந்த குழந்தையிடம் தந்தை மீண்டும் கூறினார், நான் உன்னை பார்த்து விட்டேன் நீ குதி நான் உன்னை பிடித்துக் கொள்வேன், என்று தந்தை கூறியதைக் கேட்டு, அக்குழந்தை மாடியில் இருந்து குதிக்கவே, அக்குழந்தையின் தந்தை அந்த குழந்தையை தனது கையில் பிடித்து காப்பாற்றி விட்ட

24, ஜூன், 2023.திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா

 திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா.  ஏசாயா 49 : 1 - 6.  திருப்பாடல் 139,  திருத்தூதர் பணி 13 : 22 - 26.  லூக்கா 1 : 57 - 66, 80.  இறைவனின் கருவறை   நம் திரு அவையில் மூன்று நபர்களின் பிறப்புகளை பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என்ற மரபு உண்டு.  முதலாவதாக நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, இரண்டாவதாக அன்னை கன்னி மரியாவின் பிறப்பு,  மூன்றாவதாக இன்று நாம் விழா கொண்டாடும் திருமுழுக்கு யோவானின் பிறப்பு.  இந்த உலகில் உயிர்கள் தோன்றுவதே அதிசயம் தான்.  நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளையும் உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் என்று நாம் வரையறுத்து விடுவோம். எதை கொண்டு இவற்றை உயிருள்ள பொருள் அல்லது உயிரற்ற பொருள் என்று வரையறுக்கிறோம்.  ஒவ்வொரு உயிருள்ள பொருளும் எப்பொழுது அதன் வளர்ச்சியை, அல்லது வளர்வதை நிறுத்துகிறதோ, அப்போது அந்த பொருள் உயிரற்ற பொருளாகி விடுகிறது.  உதாரணத்திற்கு ஓரறிவு கொண்ட மரங்கள் முதல் ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை.  பெரும்பாலும் உயிரோடு இருப்பவற்றை நாம் பொருள்கள் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம், மாறாக இறந்தது அல்லது உயிரற்ற வற்றையே நாம் பொருள்கள் அல்லது சொத்துகளாக கணக்

பொதுக்காலம் 11 ஞாயிறு விடுதலைப் பயணம் 19 :2-6 திருப்பாடல் 100 உரோமையர் 5 :6 - 11 மத்தேயு 9:36-10:8

 பொதுக்காலம் பதினோராம் ஞாயிறு  விடுதலைப் பயணம் 19 :2-6  திருப்பாடல் 100  உரோமையர் 5 :6 - 11  மத்தேயு 9:36-10:8  இறைவனின் கொடையாய்  கொடை என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு ஆனால் விவிலிய பின்னணியில் கொடை என்ற வார்த்தையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நம்மிடம் இல்லாத ஒன்றை இலவசமாக பெறுவதாகும்.  நாம் ஒவ்வொரு நாளும் பெரும் கொடைகள் எவை?  ஒளியை கொடையாக பெறுகிறோம், காற்றை கொடையாக பெறுகிறோம், நீரை கொடையாக பெறுகிறோம், நெருப்பிலிருந்து அனலை கொடையாக பெறுகிறோம், வானிலிருந்து மழையை கொடையாக பெறுகிறோம்.  இவ்வாறு நாம் பலவற்றை கொடையாக பெறுகிறோம்.  இன்று இறைவாக்கு வழிபாடானது நம்மை இறைவனின் கொடையாக வாழ அழைப்பு விடுக்கிறது.  1. எதற்காக நாம் இறைவனின் கொடையாக வாழ வேண்டும்?  நான்கு புள்ளி ஐந்து மில்லியன் ஆண்டு உலக வரலாற்றில் கோடிக்கணக்கான மக்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்.  ஆனால் ஒரு சிலரை மட்டுமே இந்த உலக வரலாறு நினைவு கூறுகிறது. இந்த உலகை வெல்ல வேண்டும் என்று முயற்சி செய்த அலெக்சாண்டர், ஹிட்லர், நெப்போலியன் என்று பலரும் முயற்சி செய்து இருந்தாலும், தனது உயிரை பிறருக்காக சிலுவையில