Posts

Showing posts from August, 2023
 27/08/2023 பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு எசாயா 22: 19-23 உரோமையார் 11:33-36 மத்தேயு 16:13-20. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. ஏ பி ஜே அப்துல் கலாம். வரலாற்றில் தனக்கென எழுதப்பட்ட பக்கங்களை படிக்க வைப்பவரே தலைவர் ஆவார். இன்றைய வாசகங்களின் கருப்பொருளும் தலைமை பண்பை மையப்படுத்தியதாகவே உள்ளது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவை திருஅவையின் முதல் திருத்தந்தையாக மாற்றப் போவதை முன்னறிவிக்கின்றார். திருஅவையின் தலைவர் இயேசு கிறிஸ்து. அவருக்கு அடுத்தபடியாக திருஅவையை பொறுப்புடன் வழி நடத்தும் பணியானது புனித பேதுருவுக்கு வழங்கப்பட்டது.  இந்த உலகில் எல்லாத் திறமைகளும் உடையவர்களும் இல்லை. எந்தத் திறமையும் இல்லாதவர்களும் இல்லை. இயற்கை ஒரு சமத்தன்மையுடன் நம்மைப் படைத்திருக்கிறது. சிறகுகள் இல்லாத பறவைகளுக்குக் கால்கள் கனமாக இருக்கிறது, வண்ணமில்லாத மலர்களுக்கு வாசம் கூடுதலாக இருக்கிறது. என்று சொல்லி உள்ளார் ஆசிரியர் வெ. இறையன்பு என்பவர். இயற்கையும் இறைவனும் நம்மை சமமாகவ
 20/08/2023. பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு. முதல் வாசகம்: எசாயா 56: 1, 6-7 பதிலுரைப் பாடல்: திபா 67: 1-2. 4. 5,7 இரண்டாம் வாசகம்: உரோமையர் 11: 13-15, 29-32 நற்செய்தி வாசகம்: மத்தேயு15: 21-28 தடம் மாற வேண்டும் தேன் என்பது மிகவும் இனிமையானது, அதை சுவைக்காத நபர் நம்மில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தத் தேன் எங்கிருந்து வந்தது என்பதை அந்தத் தேனைச் சுவைக்கும் நாம் அறிவதில்லை. அந்தத் தேன் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து இருக்கலாம், ஆனால் நாம் அதன் சுவையை மட்டுமே சுவைக்கின்றோம். அந்தத் தேன் எந்த பூவில் இருந்து வந்தது, எத்தனை நாட்களுக்கு முன் வந்தது என்று எதுவுமே நாம் அறிவதில்லை. பல்லாயிரம் மலர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட துளித்துளி தேன் தான், ஒரு பெரிய தேன் கூட்டில் சேகரிக்கப்பட்டு நாம் சுவைக்கும் தேனாக இருக்கிறது. இன்றைய நற்செய்தி ( மத்தே 15: 21 -28) வாசகத்தில் வரும் கானானியப் பெண்ணின் நம்பிக்கையும் ஒரு மலரில் பூத்த தேன் போன்றது. பல்லாயிரம் கோடி மக்கள், மீட்புக்காக நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்த தருணம் அது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசு கானானியப் பெண்ணை சந்
13/ 08/2023. பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு முதல் வாசகம்: 1 அரசர்கள் 19: 9a, 11-13a பதிலுரைப் பாடல்: திபா 85: 8ab,9. 10-11. 12-13 (பல்லவி: 7) இரண்டாம் வாசகம்: உரோ9: 1-5 நற்செய்தி வாசகம்: மத்தேயு 14: 22-33.  பயணப் படிக்கட்டுகள் 1. ஒரு கிராமத்தில் அனைவரும் மழை வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்த பொழுது, ஒரு சிறுவன் மட்டும் கையில் குடையோடு வந்தான். இதுதான் நம்புவது ( believe ), நான் நினைப்பது நடக்கும் என்று உறுதியான உணர்வு. தன் மீது கொள்ளும் நம்பிக்கை. 2. ஒரு குழந்தையை தூக்கிப்போட்டு பிடிக்கும் பொழுது, அந்தக் குழந்தையின் முகத்தில் சிரிப்பு இருக்கும். இதற்கு காரணம் நாம் அந்த குழந்தையை பாதுகாப்பாக மீண்டும் பிடிப்போம் என்பதாகும். இதுவே பிறர் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை. ( trust ) 3. ஒவ்வொரு இரவும், நாம் தூங்கப் போவதற்கு முன், கடிகாரத்தில் அலாரம் வைத்து உறங்குவோம், நாளை என்பது நிச்சயம் இல்லாத இந்த வாழ்விலே, அடுத்த நாளுக்கான அலாரத்தை கடிகாரத்தில் வைத்து விட்டு தூங்கச் செல்லும் உள்ளம் கொண்டிருப்பது தான் எதிர்நோக்கு(hope). இருளில் கூட ஒளியை பார்ப்பது.  இன்று நம் வாழ்க்கை முழுவதும் தன் மீ
 06/08/2023 ஆண்டவரின் தோற்ற மாற்றம். மாற்றம் வேண்டாமா கிபி 11ம் நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்ட இந்த வழிபாடானது, கிபி 1457 ல் உரோமைப்பட்டியலில் இணைக்கப்பட்டது. இயேசுவின் தோற்ற மாற்றம் ஐந்து நிலைகளில் நடைபெறுகிறது. மத்தேயு 17 1-9 வரை உள்ள வார்த்தைகளை அடிப்படையில், முதலாவதாக இயேசு தன் சீடர்களை ஒரு உயர்ந்த மலைக்கு அழைத்துச் செல்கின்றார். இரண்டாவதாக அவர்கள் முன் அவர் உருமாற்றம் அடைகின்றார். மூன்றாவதாக அங்கு மோசேயும் எலியா வுட் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நான்காவதாக சீடர்கள் அங்கேயே இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள். ஐந்தாவதாக இயேசு தனது விருப்பத்lதை கூறுகிறார். இயேசு தனது சீடர்களை உயர்ந்த மலைக்கு அழைத்துச் செல்வதன் நோக்கம். அவர்களுக்கு தந்தை அனுபவத்தை பெற்று தருவது ஆகும்.  இயேசு அவர்கள் முன் உருமாறியதன் காரணம், அவர்களும் தங்களது உண்மையான நிலையை அறிந்து உணர வேண்டும் என்பதாகும் மோசையுடனும் எலியாவுடனும் இயேசு பேசிக் கொண்டிருந்தது போல், சீடர்களும் தந்தையோடும் இயேசுவோடும் பேச வேண்டும் என்பதாகும். சீடர்கள் அங்கேயே இருப்பது நல்லது என்று சொல்வதன் நோக்கம், இறைவனின் அன்பை சுவைத்தவர்கள் அ
 05/08/2023  மரியன்னை பேராலய நேர்ந்தளிப்பு  ( பணிமய மாதா)   இயேசுவின் அன்னையை கடவுளின் தாய் என்று கி பி 431 ஆம் ஆண்டில் எபேசு சங்கம் அறிவித்தபின், திருத்தந்தை மூன்றாம் கிறிஸ்துஸ் உரோமையில் எஸ்குலைன் குன்றுகள் மீது ஒரு பேராலையம் எழுப்பி, இறைவனின் தூய அன்னைக்கு அதை நேர்ந்து அளித்தார். தூய கன்னி மரியாவின் மாட்சிக்கு இன்று நேர்ந்து அளிக்கப்பட்ட மிகத் தொன்மை வாய்ந்த கோயில் இதுதான். இன்று உலகம் முழுவதும் அன்னை மரியாவுக்கு ஏராளமான கோயில்கள் உண்டு. ஆனால் அன்னை மரியா வாழ்ந்த காலத்தில், அவர் இறைமகனை பெற்றெடுப்பதற்கு என்று ஒரு சத்திரம் கூட கிடைக்கவில்லை. இதை எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்றால், ஒருவர் நம்முடன் இருக்கும் போது அவரின் அருமை தெரியாது, மாறாக அவர்கள் நம்மிடையே இல்லாத போது அவர்களுக்கு வேண்டியதை செய்வதற்கு ஒப்பாகும். அன்னை மரியாவிடம் நாம் பலவற்றைக் குறித்து வேண்டுதல்கள் எழுப்பினாலும், அடிப்படையில் தேவைப்படுவது ஒன்று மட்டும்தான். "தூய மரியாவே இறைவனின் அன்னையே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும்" என்பதே அது. நம் பாவங்களுக்கு மன
 04/08/2023 புனித ஜான் மரிய வியான்னி  நம் வார்த்தையால் செய்கையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகின்றது என்றால் அதுவும் ஒரு வகை தர்மம் தான். நம் வார்த்தைகளால் செயல்களால் ஒருவரின் மனதை நிம்மதி அடையச் செய்கிறோமா? அல்லது புண்படுத்துகிறோம்? இவ்வகை தருணத்தில் அதிகம் ஈடுபட்டவரே நம் புனித ஜான் மரிய வியான்னி. இயேசு தனது சொந்த ஊரில் உள்ள தொழுகை கூடத்தில் போதித்த போது, மக்கள் அவரை ஏழு கேள்விகளின் அடிப்படையில் பார்த்தார்கள். 1. இயேசு தச்சரின் மகன் அல்லவா 2. இவருடைய தாய் மரியா என்பவர் தானே 3. இவர் சகோதரர்கள் யாக்கோபு யோசேப்பு சீமோன் யூதா அல்லவா 4. இவர் சகோதரர்கள் எல்லாம் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா 5. எப்படி இந்த வல்ல செயல்களை செய்கிறார் 6. இந்த ஞானம் இவருக்கு எங்கிருந்து வந்தது 7. பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தது இவ்வாறு மக்கள் இயேசுவை பார்த்த பார்வையானது, மக்களின் இயல்பான பார்வையாகவே உள்ளது. பொதுவாக நாம் பிறரை அவர்கள் இருக்கும் விதத்தில் பார்க்காமல், நாம் எப்படி நினைக்கிறோமோ அவ்வாறு பார்க்க விரும்புவோம். இது அவர்களின் உண்மை தன்மையை நம் கண்களில் இருந்து மறைத்து விடுகிறது. இது உளவியல் பார்வ