நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பதன் மூலம் நீங்கள் உங்கள் மதிப்பைக் காட்டுகிறீர்கள்... இது மட்டும் நடந்துவிட்டால்...!!! இது மட்டும் கிடைத்துவிட்டால்...!!! இந்த எண்ணமே மனதின் சூழ்ச்சி வலையாகும்...! எது நடந்தாலும், எது கிடைத்தாலும், மனம் ஒருபோதும் உன்னை மகிழ்ச்சியாக இருக்கவிடாது....!!!
Posts
Showing posts from July, 2023
- Get link
- X
- Other Apps
பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு 30/07/2023. இறைவன் கண்டெடுத்த செல்வங்கள். விண்ணரசு பற்றிய புரிதலோடு தொடர்புடைய இன்றைய நற்செய்தி, நாமே இறைவன் கண்டெடுத்த செல்வம் என்ற மைய கருத்தை நமக்கு கற்றுத் தருகிறது. விண்ணரசு என்றால் என்ன? என்ற கேள்வி அன்று தொடங்கி இன்று வரை நம் நடுவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சியை மக்களாட்சி என்கிறோம் . அதுபோலவே இறைவனால் இறைவனின் பிள்ளைகளுக்காக இறைவனே நடத்தும் ஆட்சியை இறையாட்சி என்கின்றோம். இப்பொழுது இந்த இறைவனின் பிள்ளைகள் யார் என்ற கேள்வி நம்மில் எளிதாக எழலாம். இன்றயஇரண்டாம் வாசகத்தின் பின்புலத்தில் ( உரோமையர் 8:30 ) நான்கு நிலைகளில் இதை நாம் புரிந்து கொள்ளலாம். 1. இறைவனால் முன் குறித்து வைத்தோர். 2. இறைவனால் அழைக்க பெற்றோர். 3. இறைவனால் அவருக்கென ஏற்புடையவர்கள் ஆனோர். 4. இறைவனின் மாட்சியில் பங்கு பெறுவோர். 1.இறைவனால் முன் குறித்து வைக்கப்பட்டோர் இந்த உலகில் உள்ள அனைவருமே இறைவனால் முன்குறித்து வைக்கப்பட்டுள்ளோர். அதுவும் தாயின் கருவிலே நாம் உருவாவதற்கு முன்பே இறைவன் நம்மை அறிந்து இருக்கின்றார். எரே...
- Get link
- X
- Other Apps
23/07/2023. பொதுக்காலத்தின் 16ம் ஞாயிறு. முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 12:13,16-18 இரண்டாம் வாசகம்: உரோமையர் 8:26-28 நற்செய்தி வாசகம் : மத்தேயு 13 :24-43. இறைவனின் களஞ்சியத்தில் உள்ள கோதுமைகளாய் ஒரு பங்கில் உள்ள பங்குத்தந்தைக்கு ஒரு பழக்கம் இருந்தது. ஆலயத்தில் உள்ள ஒலிவாங்கியை திருப்பலிக்கு முன் சோதிப்பார். அந்த ஒலிவாங்கியின் முன் நின்று 'விண்ணரசு வருக விண்ணரசு வருக ' என்று கூறுவார். இதை கண்ட ஒரு இளைஞர்,அந்த குருவானவர் சென்ற பின்பு, அந்த ஒலி வாங்கியில் கூறிய ' அந்த விண்ணரசு யார்? உடனடியாக வந்து பங்குத் தந்தையை சந்திக்கவும்' என்று அறிவிப்பு கொடுத்தான். இந்த கதையை நகைச்சுவைக்காக சொல்வார்கள். இன்று நம் நடுவிலும் விண்ணரசு பற்றிய புரிதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதும் ஒரு கேள்விக்குறிதான். இன்றைய (மத்தேயு13:24-43) நற்செய்தி வாசகத்தின் முக்கிய நோக்கம் விண்ணரசு பற்றிய சரியான புரிதலை நமக்குத் தருவதாகவே உள்ளது. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு விண்ணரசு பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. கடவுள் ஆட்சி என்பது, இறைவன் அனைத்து அரசுகள் மீதும் போரிட்டு இந்த உல...
- Get link
- X
- Other Apps
16 ஜூலை 2023, ஞாயிறு* *பொதுக்காலம் 15ஆம் வாரம் - ஞாயிறு. முதல் வாசகம்: -எசா 55:10-11 இரண்டாம் வாசகம்: - உரோ 8: 18-23. நற்செய்தி வாசகம் -- மத் 13:1--23... கடற்கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு மாணவன் தனது சக நண்பனிடம் 'நான் 34 மதிப்பெண்கள் எடுத்து விட்டேன்' என்று பெருமையோடு கூறினான். அதற்கு அவனுடைய நண்பன் கவலை கொள்ளாதே, அடுத்த தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று விடலாம், என்று ஆறுதல் கூற, மறுமொழியாக அந்தப் பையன் சொன்னான் நான் ஆறு பாடங்களில் 34 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன் என்று. இது நாம் கேட்பதற்கு சற்று நகைச்சுவையாக இருக்கலாம் இருந்த போதிலும், இன்று நம் நடுவில் இருக்கின்ற மாணவ மாணவியர்கள் தங்களது இலக்கு என்ன என்று தெரியாமல் தாங்கள் என்ன செய்ய வேண்டும்? எதை கற்று கொள்ள வேண்டும்? என்று தெரியாமல், வழி தவறி சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் இன்று நம் கையில் இருக்கின்ற சமூக ஊடகக் கருவிகளும், வலைத்தளங்களும்தான். திருத்தந்தை பிரான்சிஸ் ஒருமுறை சொன்னார் செல்போன்கள் என்பது முற...
- Get link
- X
- Other Apps
09 ஜூலை 2023, ஞாயிறு* *பொதுக்காலம் 14ஆம் வாரம் - ஞாயிறு* செக்கரியா 9:9-10 திபா 145 மத்தேயு 9: 14-17 நாமே இறைவனின் நுகங்கள் ஒரு முட்டாள் விஞ்ஞானி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, அவரது வாகனம் பழுதடைந்து விட்டதாம். பக்கத்தில் வேறு கடை இல்லாததால் அந்த விஞ்ஞானியே இறங்கி சரி செய்ய தொடங்கினார்,அவர் இறங்கி சரி செய்யும் பொழுது ஒரு சக்கரத்தில் உள்ள நான்கு போல்டுகளும் அருகிலுள்ள சாக்கடையில் விழுந்து விட்டது. அவ்வழியே வந்த அழுக்கு உடை அணிந்த ஒரு பையனிடம் அந்த விஞ்ஞானி சொன்னாராம் "நீ எனக்காக அந்த சாக்கடையில் இறங்கி அந்த நான்கு போல்டுகளையும் எடுத்துக் கொடுத்தால் நான் உனக்கு மிட்டாய் தருகிறேன்" என்று. அதற்கு மறுமொழியாக அந்தப் பையன் கூறியது "மற்ற மூன்று சக்கரங்களில் உள்ள நான்கு போல்டுகளில் ஒரு ஒரு போல்ட்டை எடுத்து இதில் மாட்டிக் கொண்டு அருகில் இருக்கும் பழுது பார்க்கும் கடைக்கு சென்றால் அவர்கள் வாகனத்தை சரி செய்து விடுவார்கள்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம். இந்தப் பையனை இவ்வளவு குறைவாக எடை போட்டு விட்டோமே என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டு தலைகுனிந்தார் அந்த விஞ்ஞானி. ஒர...
*08 ஜூலை 2023, சனி* *பொதுக்காலம் 13ஆம் வாரம் - சனி*
- Get link
- X
- Other Apps
*08 ஜூலை 2023, சனி* *பொதுக்காலம் 13ஆம் வாரம் - சனி* தொடக்க நூல் 27: 1-5, 15-29* திபா 135: 1-2. 3-4. 5-6. மத்தேயு 9: 14-17 வெற்றிப்படிக்கட்டுகள் கனவுகளுக்கும் குறிக்கோள்களுக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகவே இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. கனவுகள் குறிக்கோளை இனங்கண்டு அதனை நெறிப்படுத்தவும் கூடும், அவையே சில வேளைகளில் குறிக்கோளை சிதைக்கவும் கூடும்! வளையற்காரனின் கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது! ஒருவன் வளையல் வாணிபம் செய்ய முடிவெடுத்து வளையல்களை வாங்கிக் கூடையில் அடுக்கிக்கொண்டு அவற்றை விற்கச் செல்வதற்கு முன் ஒரு கல்லில் அமர்ந்து பகற்கனவு காண ஆரம்பித்தான். கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டான், அவை திக்குத் தெரியாமல் ஓடின, அவன் நினைத்தான், “நான் இந்த வளையல்களை விற்றுக் கிடைக்கும் ஆதாயத்தைக் கொண்டு துணி வாணிபம் தொடங்குவேன், அதன் மூலம் இந்த நாட்டிலேயே எனக்கு நிகரான வணிகனோ, பணக்காரனோ இல்லை எனும்படி கோடி கோடியாய் சம்பாதிப்பேன், என்னுடைய வளர்ச்சியைக் கண்டு அரசன் தன் மகளை எனக்கு மணம் முடித்து வைக்க விரும்புவான், முதலில் நான் அவனிடம் முடியாது என்று பிகு பண்ணுவேன், பிறகு அவன் ...